Home /News /entertainment /

விஷாலின் வீரமே வாகை சூடும் வெளியீட்டு தேதி அறிவிப்பு

விஷாலின் வீரமே வாகை சூடும் வெளியீட்டு தேதி அறிவிப்பு

வீரமே வாகை சூடும்

வீரமே வாகை சூடும்

2022 ஜனவரி குடியரசுத்தினத்தன்று படத்தை வெளியிட திட்டமிட்டுள்ள படக்குழு, தற்போது திரையரங்குகளை உறுதி செய்யும் பணியினை செய்து வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தன்று வெளியாகிறது, நடிகர் விஷாலின் “வீரமே வாகை சூடும்” திரைப்படம்.

    நடிகர் விஷாலின் விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் அறிமுக இயக்குநர் து.ப.சரவணன் இயக்கி வரும் திரைப்படம் “வீரமே வாகை சூடும்”. அதிகார மட்டதிற்கு எதிராக எளியவன் ஒருவன் போர்க்கொடி தூக்கும் கதை தான் இப்படம்.

    இப்படத்தின் அனைத்து கட்ட பணிகளும் முடிந்து தற்போது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. வரும் 2022 ஜனவரி 26-ம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு.

    அதிகார பலம் படைத்தவர்களை எதிர்கொள்ளும் சாமானியன் ஒருவனின் கதையில் விஷாலின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ளது இப்படம். அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் ஆக்சன் படமாக உருவாகியுள்ளது. ஹைதராபாத்தின் பல பகுதிகளிலும், சென்னையை சுற்றியுள்ள பகுதிகளிலும் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது.

    தற்போது படத்தின் வெளியீட்டு பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. வரும் 2022 ஜனவரி குடியரசுத்தினத்தன்று படத்தை வெளியிட திட்டமிட்டுள்ள படக்குழு, தற்போது திரையரங்குகளை உறுதி செய்யும் பணியினை செய்து வருகிறது.

    வீரமே வாகை சூடும் படத்தில் விஷால் நாயகனாக நடிக்க, டிம்பிள் ஹயாதி நாயகியாக நடிக்கிறார். யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, RNR மனோகர், பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா, KSG வெங்கடேஷ், மரியம் ஜார்ஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
    Published by:Shalini C
    First published:

    Tags: Vishal

    அடுத்த செய்தி