விஷாலின் விஷால் ஃபிலிம் பேக்டரி தயாரித்துள்ள வீரமே வாகை சூடும் படம் வெளிவரும் முன்பே விஷாலுக்கு லாபம் சம்பாதித்து தந்துள்ளது.
விஷால் நடிப்பில் சமீபமாக வெளியான படங்கள் அனைத்தும் சுமாராகவே போனது. கடைசியாக வெளியான எனிமி படம் தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக கேள்வி. இந்நிலையில் அவரது வீரமே வாகை சூடும் படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை சுப்பையா சண்முகம் என்பவர் வாங்கியுள்ளார். சுமார் பத்தரை கோடிகள் தந்து அவர் இந்த உரிமையை கைப்பற்றியதாக தகவல்.
நடிகை நிதி அகர்வாலுடன் லிவிங் டுகெதரில் சிம்பு? விரைவில் திருமணம்?
வீரமே வாகை சூடும் படத்தை து.பா.சரவணன் இயக்க, விஷால், டிம்பிள் ஹயாதி, யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். யுவன் இசையமைக்க, கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் தொடங்கிய இப்படம் அதிக இடைவெளிகள் இல்லாமல் விரைவில் முடிக்கப்பட்டது. மலையாள
நடிகர் பாபுராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
ராஜா சாருக்கு இது தெரியாதா? இளையராஜாவை விமர்சிக்கும் சின்மயி
வீரமே வாகை சூடும் இந்த மாதம் 26-ம் தேதி வெளியாகும் என அறிவித்திருக்கிறார்கள்.
திரையரங்குகள் 50 சதவீத பார்வையாளர்களுடன் இயங்குகிற நிலையில் பத்தரை கோடிகளுக்கு வீரமே வாகை சூடும் விலை போயிருப்பது ஆச்சரியமான அதிர்ஷ்டம். இவை தவிர சேட்டிலைட், டிஜிட்டல், தெலுங்கு உரிமை ஆகியவற்றின் மூலம் கணிசமான கோடிகள் விஷாலுக்கு கிடைக்கும்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.