விஷாலின் 34-வது படம் குறித்த தகவல் கசிந்துள்ளது. இந்தமுறை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம், ஸீ ஸ்டுடியோஸுடன் இணைந்து விஷால் நடிக்கும் படத்தை தயாhpக்கிறது.
விஷால் இப்போது லத்தி படத்தில் நடித்து வருகிறார். விஷாலின் நண்பர்கள் நந்தா, ரமணா படத்தை தயாரிக்கின்றனர். இதையடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படத்தில் நடிக்கிறார். பான் - இந்தியா திரைப்படமாக உருவாகும் இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கிறார். மினி ஸ்டுடியோஸ் வினோத்குமார் படத்தை தயாரிக்கிறார். இவர் தான் விஷாலின் எனிமி படத்தை தயாரித்திருந்தார்.
Sivakarthikeyan: 4 கோடி சம்பள பாக்கியை தரக்கோரி பிரபல தயாரிப்பாளர் மீது சிவகார்த்திகேயன் வழக்கு
எனிமி நஷ்டமடைந்ததால் மார்க் ஆண்டனி படத்துக்கு பேசிய சம்பளத்தில் சில கோடிகள் குறைக்க, வினோத் விஷாலிடம் கேட்டதாகவும், அவர் சம்பளத்தை குறைக்க மறுத்ததாகவும் பட அறிவிப்புக்கு முன் சர்ச்சை எழுந்தது. அதை மீறி படம் தொடங்கப்பட்டது. இப்போது மீண்டும் விஷாலுக்கும், வினோத்துக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாக இன்டஸ்ட்ரியில் கிசுகிசுக்கின்றனர். இப்படியொரு நிலையில் தனது 34 வது படத்தை விஷால் கமிட் செய்துள்ளார்.
மகிழ்ச்சி மற்றும் அமைதியான வாழ்க்கைக்காக மதம் மாறினேன் - வனிதா விஜயகுமார்
கார்த்திக் சுப்புராஜ், ஸீ ஸ்டுடியோஸ், விஷால் இணையும் இந்தப் படத்தை முத்தையா இயக்குகிறார். முத்தையா கமலை வைத்து படம் இயக்குவார் என்று சொல்லப்பட்ட நிலையில், அவர் தனது மருது நாயகனுடன் மீண்டும் இணைந்துள்ளார். படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.