ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நடிகையை மணக்கும் விஷால்?

நடிகையை மணக்கும் விஷால்?

விஷால்

விஷால்

‘மார்க் ஆண்டனி’ படத்தில் விஷாலுக்கு மனைவியாக நடிப்பதாக அபிநயா தரப்பில் தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நடிகர் விஷால் முக்கிய நடிகை ஒருவரை திருமணம் செய்துக் கொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. 

  தமிழ் சினிமாவின் முன்னணி ஆக்‌ஷன் ஹீரோவான விஷால், தென்னிந்திய மாநிலங்கள் மட்டுமின்றி இந்தி பெல்ட்டிலும் மார்க்கெட் வைத்திருக்கும் சில நட்சத்திரங்களில் ஒருவர். அவரது அடுத்தப் படம் லத்தி. விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்திருக்கும் இப்படம் போலீஸ் கதை களத்தில் இயக்கப்பட்டிருக்கிறது.

  இந்நிலையில் தற்போது 45 வயதாகும் விஷால் பிரபல நடிகை அபிநயாவை திருமணம் செய்து கொள்ளப் போவதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவ ஆரம்பித்தன. முன்னதாக, நடிகை வரலட்சுமி சரத்குமாருடன் அவர் டேட்டிங் செய்வதாக வதந்தி பரவியது. பின்னர் விஷாலுக்கும் தெலுங்கு நடிகை அனிஷா அல்லா ரெட்டிக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் தனிப்பட்ட காரணங்களால் அந்த நிச்சயதார்த்தம் முறிந்தது.

  ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மார்க் ஆண்டனி’ படத்தில் விஷாலுக்கு மனைவியாக நடிப்பதாக அபிநயா தரப்பில் தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்காக நடத்தப்பட்ட ஃபோட்டோஷூட் தான் தேவையற்ற வதந்தியைத் தூண்டியதாகவும் தெரிகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதுவரை ஒரே நேரத்தில் வெளியான விஜய் - அஜித் படங்கள்... வெற்றியாளர் யார் தெரியுமா?

  சசிகுமாரின் 'நாடோடிகள்' படத்தின் மூலம் அறிமுகமான அபிநயா, 'ஆயிரத்தில் ஒருவன்', 'ஈசன்', 'வீரம்', 'தனி ஒருவன்', 'ஷமிதாப்', 'விழித்திரு', ‘சீதா ராமம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக விஷாலுடன் ‘பூஜை’ படத்திலும் நடித்துள்ளார்.

  Published by:Shalini C
  First published:

  Tags: Actor vishal