• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • 2022-ல் கனவுப் படத்தை இயக்கும் விஷால்!

2022-ல் கனவுப் படத்தை இயக்கும் விஷால்!

விஷால்

விஷால்

படத்தை விஷால் இயக்கி, நடித்து வெளியிட உள்ளார். எழுத்து, இயக்கம் என துப்பறிவாளன் 2 படத்தில் விஷாலின் பெயரே இடம்பெறுகிறது.

  • Share this:
    2022 அக்டோபரில் தனது கனவுப் படத்தை இயக்கயிருப்பதாக நடிகர் விஷால் கூறியுள்ளார்.

    விஷால் நடிப்பில் எனிமி படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4-ம் தேதி வெளியாகி சுமாரான வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது அவர் நடிப்பில் வீரமே வாகை சூடும், லத்தி படங்கள் தயாராகி வருகின்றன. இதில் வீரமே வாகை சூடும் படத்தை விஷால் ஃபிலிம் பேக்டரியும், லத்தி படத்தை விஷாலின் நண்பர்கள் ரமணா, நந்தாவின் ராணா நிறுவனமும் தயாரித்து வருகின்றன.

    இந்தப் படங்களுக்குப் பிறகு ஆதிக் ரவிச்சிந்திரன் இயக்கத்தில் விஷால் ஒரு படம் நடிப்பதாக கூறப்படுகிறது. 2022 ஜனவரி முதல் துப்பறிவாளன் 2 படத்தை விஷால் மீண்டும் தொடங்குகிறார். மிஷ்கின் இயக்கத்தில் தொடங்கப்பட்ட இப்படம் லண்டனில் நடந்த முதல் ஷெட்யூல்டுடன் மிஷ்கினுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் நிறுத்தப்பட்டது. இந்தப் படத்தை விஷால் இயக்கி, நடித்து வெளியிட உள்ளார். எழுத்து, இயக்கம் என துப்பறிவாளன் 2 படத்தில் விஷாலின் பெயரே இடம்பெறுகிறது.

    அடுத்த வருடம் அக்டோபரில் தனது கனவுப் படத்தை இயக்கவிருப்பதாக விஷால் கூறியுள்ளார். விஷால் செல்லமே படத்தில் நடிப்பதற்கு முன், அர்ஜுனின் படங்களால் கவரப்பட்டு அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். படம் இயக்குவதே அவரது ஆரம்பகால லட்சியமாக இருந்தது. செல்லமே படத்தில் நடிகராக அறிமுகமானது அனைத்தையும் மாற்றிப் போட்டது. மிஷ்கினுடனான தகராறு அவரை இயக்குனராக்கியது. அடுத்த வருட இறுதியில் தனது கனவுப் படத்தை இயக்கப் போவதாக கூறியிருக்கிறார்.

    அது என்ன கனவு என்பது தான் தெரியவில்லை.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: