ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Vishal: உங்களுக்கு தலை வணங்குகிறேன்... மோடிக்கு நன்றிக்கு சொன்ன விஷால்!

Vishal: உங்களுக்கு தலை வணங்குகிறேன்... மோடிக்கு நன்றிக்கு சொன்ன விஷால்!

விஷால்

விஷால்

கோவிலை புதுப்பித்து, அதை இன்னும் அற்புதமாகவும், எளிதாக எவரும் தரிசனம் செய்வதற்காக நீங்கள் செய்த மாற்றத்திற்காக கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நடிகர் விஷால் பிரதமர் மோடிக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். 

  தமிழ் சினிமாவின் முன்னணி ஆக்‌ஷன் ஹீரோவான விஷால், தென்னிந்திய மாநிலங்கள் மட்டுமின்றி இந்தி பெல்ட்டிலும் மார்க்கெட் வைத்திருக்கும் சில நட்சத்திரங்களில் ஒருவர். அவரது அடுத்தப் படம் லத்தி. விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்திருக்கும் இப்படம் போலீஸ் கதை களத்தில் இயக்கப்பட்டிருக்கிறது. அதோடு மார்க் ஆண்டனி படத்திலும் நடிக்கவிருக்கிறார். இது தவிர, துப்பறிவாளன் 2 படத்தை தானே இயக்கி நடிக்கவிருக்கிறார் விஷால்.

  இந்நிலையில் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் விஷால், ”அன்புள்ள மோடி ஜி, நான் காசிக்குச் சென்றேன். அற்புதமான தரிசனம் / பூஜை செய்து, கங்கை நதியின் புனித நீரை தொட்டேன். கோவிலை புதுப்பித்து, அதை இன்னும் அற்புதமாகவும், எளிதாக எவரும் தரிசனம் செய்வதற்காக நீங்கள் செய்த மாற்றத்திற்காக கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்களுக்கு தலை வணங்குகிறேன். வணக்கம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

  Vishal thanks to PM Modi, vishal, vishal instagram, vishal movie 2022, actor vishal modi, pm modi, narendra modi, பிரதமர் மோடி, விஷால், நடிகர் விஷால்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  விஷாலுடன் இந்த புனித பயணத்தில் அவரது நண்பர் நந்தாவும் இணைந்துள்ளார்.

  Published by:Shalini C
  First published:

  Tags: Actor vishal, Modi