அனிஷாவை காதலிக்கிறேன்... விரைவில் திருமணம் - விஷால் ஓபன் டாக்

சமீபத்தில் நடிகர் விஷால் தொழிலதிபரின் மகள் அனிஷாவை திருமணம் முடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின.

Web Desk | news18
Updated: January 10, 2019, 8:37 PM IST
அனிஷாவை காதலிக்கிறேன்... விரைவில் திருமணம் - விஷால் ஓபன் டாக்
நடிகர் விஷால்
Web Desk | news18
Updated: January 10, 2019, 8:37 PM IST
ஆந்திராவைச் சேர்ந்த தொழிலதிபரின் மகளை காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

நடிகரும் இயக்குநருமான அர்ஜுனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் விஷால். திடீரென ‘செல்லமே’ என்ற படத்தின் மூலம் அவர் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து வெற்றிப்படங்கள் கொடுத்த அவர் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக திகழ்ந்தார்.

தயாரிப்பாளராகவும் மாறி 'துப்பறிவாளன்', 'பாண்டியநாடு', 'ஆம்பள' உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார். தற்போது தமிழ் திரையுலகில் நடிகர் சங்கத்தின் செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.

பத்திரிகையாளர்கள் சந்திப்பில் திருமணம் குறித்து பலமுறை கேள்வி எழுப்பப்பட்ட போது, “நடிகர் சங்கத்தின் கட்டிடப் பணிகள் முடிந்து, அதில் தான் திருமணம் செய்து கொள்வேன்” என்று கூறியிருந்தார்.

இடையில் ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்து பின்னர் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. விரைவில் அரசியலுக்கு வருவேன் என்றும் கூறி வந்தார். நடிகை வரலக்‌ஷ்மியுடன் காதல் என்றும் அவரைச் சுற்றி கிசுகிசுக்கள் வெளிவந்தன. சமீபத்தில் நடிகர் விஷால் தொழிலதிபரின் மகள் அனிஷாவை திருமணம் முடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் தற்போது அந்த தகவலை பேட்டியொன்றில் உறுதி செய்துள்ளார் விஷால். இதுகுறித்து ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கும் அவர், எனக்கும் அனிஷா ரெட்டிக்கும் திருமணம் நடைபெற இருப்பது உண்மைதான். இது காதல் திருமணம்தான். ஒரு நிகழ்ச்சியில் அனிஷா ரெட்டியை சந்தித்தேன். அப்போதிலிருந்தே இருவரும் காதலர்களாகிவிட்டோம். நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பின்புதான் திருமணம். அதில் மாற்றம் இல்லை. கண்டிப்பாக நடிகர் சங்க கட்டடம் கட்டி முடிக்கப்படும். திருமணம் சென்னையில் தான் நடக்கும்” என்று கூறியுள்ளார்.

பேட்ட VS விஸ்வாசம்... ரசிகர்களின் மாஸ் பதில் - வீடியோ
Loading...
First published: January 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...