Home /News /entertainment /

அடுத்த பட டைட்டிலை அறிவித்தார் விஷால்... தமிழ் சினிமாவில் மறக்க முடியாத பெயர்

அடுத்த பட டைட்டிலை அறிவித்தார் விஷால்... தமிழ் சினிமாவில் மறக்க முடியாத பெயர்

விஷால்

விஷால்

Vishal | விஷால், எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் ஆதிக் ரவிச்ந்திரன் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தின் டைட்டில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    விஷால், எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் ஆதிக் ரவிச்ந்திரன் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தின் டைட்டில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ரஜினி ரசிகர்களாலும், 90ஸ் கிட்ஸ்களாலும மறக்க முடியாத படங்களில் ஒன்று என்றால், பாட்ஷா படத்தை சொல்லலாம். அதில் வில்லன் ரகுவரனின் பெயரான மார்க் ஆன்டனி, இன்றளவிலும் ஒரு பிராண்ட் நேமாக இருந்து வருகிறது. பாட்ஷாவில் வில்லத்தனத்தில் மிரட்டிய ரகுவரன், ரஜினிக்கு கடும் போட்டி கொடுத்திருப்பார்.

    இதையும் படிங்க : அஜித் ரசிகர்களுக்கு குட் நியூஸ்... சிங்கிளாக வந்து மிரட்டப் போகும் வலிமை

    இந்நிலையில், விஷாலின் அடுத்த படத்திற்கு 'மார்க ஆன்டனி' என்று பெயர் வைத்துள்ளார்கள்.



    இந்த தலைப்பை கேட்பவர்கள், பாட்ஷா படத்தின் ரகுவரனை நினைத்துப் பார்ப்பது உறுதி.

    இதையும் படிங்க : Valimai : அஜித் படத்தை பார்த்த தணிக்கைக்குழு.. வலிமையின் ரன்னிங் டைம் குறித்த விவரம் வெளியானது!

    இந்த படத்தை எனிமி படத்தை தயாரித்த வினோத் தயாரிக்கவுள்ளார். பான் இந்தியா படம் என்று போஸ்டரில் விளம்பரம் செய்திருக்கிறார்கள். சமீபகாலமாக வந்த சில பான் இந்தியா என விளம்பரம் செய்யப்பட்டு வந்த படங்கள், பான் டப்பிங் என்ற அளவிலேயே ரசிகர்கள் மனதில் இடம் பெற்றன.

    விஷால் நடிப்பில் உருவாகியுள்ள வீரமே வாகை சூடும் திரைப்படம் இம்மாதம் வெளியாகவுள்ளது. அதன்பின்னர் அவர் துப்பறிவாளன் 2 படத்தை ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தொடங்குவார் என்று சமீபத்தில் தகவல்கள் தெரிவித்தன. இதற்கிடையே, ஆதிக் ரவிச்சந்திரன் படத்தில் விஷால் கமிட் ஆகியுள்ளார்.

    இதையும் படிங்க : கே.ஜி.எஃப். 2 உடன் மோதுமா விஜய்யின் பீஸ்ட்? - இரு படங்களும் ஏப்ரலில் ரிலீஸ்

    திரிஷா இல்லைனா நயன்தாரா படத்தை இயக்கிய ஆதிக், அடுத்த படமான அன்பானவன், அசராதவன் அடங்காதவன் படத்தை சிம்புவை வைத்து இயக்கினார். இந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. குறிப்பிடத்தகுந்த அளவுக்கு ஆதிக் சினிமாவில் ஹிட் கொடுக்கவில்லை. இதுதான், விஷால் ரசிகர்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தன் மீதான விமர்சனங்களை முறியடித்து மார்க் ஆன்டனியை வெற்றிப்படமாக ஆதிக் மாற்றுவார் என்ற நம்பிக்கையில் அவரது ரசிகர்கள் உள்ளனர்.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor vishal

    அடுத்த செய்தி