”விஷாலுக்கு இனிமேல்தான் இருக்கிறது ஆப்பு” - எச்சரிக்கும் மிஷ்கின்

படத்தில் இருந்து விலக விஷாலின் நண்பர்களே காரணம் என்றும் மிஷ்கின் குற்றம்சாட்டினார்.

”விஷாலுக்கு இனிமேல்தான் இருக்கிறது ஆப்பு” - எச்சரிக்கும் மிஷ்கின்
விஷால் - மிஷ்கின்
  • News18
  • Last Updated: March 13, 2020, 7:51 AM IST
  • Share this:
விஷாலிடம் இருந்து தமிழகத்தைக் காப்பதுதான் தனது பணி என இயக்குநர் மிஷ்கின் கூறியுள்ளார். துப்பறிவாளன் இரண்டாம் பாகம் திரைப்படத்திற்கு 13 கோடி ரூபாயை செலவழித்த பின் விலகியதாக விஷால் கூறியதையும் அவர் மறுத்துள்ளார்.

நடிகர் விஷாலை வைத்து துப்பறிவாளன் - 2 திரைப்படத்தை இயக்கி வந்த நிலையில் மிஷ்கின் திடீரென பாதியில் விலகினார். அது தொடர்பாக விஷால் வெளியிட்ட அறிக்கையில், "கதை எழுத 35 லட்ச ரூபாய் செலவிட்டதுடன், படம் எடுக்க இதுவரை 13 கோடி ரூபாய் செலவழித்து விட்டு பாதியில் விலகியதாகவும்" மிஷ்கின் மீது குற்றம்சாட்டியிருந்தார். ஆனால் அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது அவற்றை மறுத்துள்ள மிஷ்கின், தன் மீதான குற்றச்சாட்டுகளை விஷால் நிரூபிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

மூன்று வருடங்களாக தம்பியாக நினைத்து பழகியதாகவும், ஆனால் விஷால் தன் தாயையே அவதூறாக பேசியதாகவும் மிஷ்கின் குறிப்பிட்டார். படத்தில் இருந்து விலக விஷாலின் நண்பர்களே காரணம் என்றும் குற்றம்சாட்டினார்.


தயாரிப்பாளர் யாரும் என்னை வைத்து படம் எடுக்கக் கூடாது என்று சொல்ல விஷால் யார் என்ற மிஷ்கின், தமிழகத்தை விஷாலிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்றார். இந்த விவகாரத்தை இதோடு விடப்போவதில்லை என்ற மிஷ்கின், விஷால் இனி தூங்க மாட்டார் என்றும் எச்சரித்தார்.

மேலும், தனது தம்பியை விஷால் தரப்பினர் அடித்தபோதும் கூட அது பற்றி இதுவரை தான் பொது வெளியில் பேசியதில்லை என்றும் மிஷ்கின் கூறினார்.
 
First published: March 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading