முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / இவர் யாருன்னு தெரியுதா? பிரபல இயக்குனரின் கேரக்டர் போஸ்டரை வெளியிட்ட மார்க் ஆண்டனி படக்குழு

இவர் யாருன்னு தெரியுதா? பிரபல இயக்குனரின் கேரக்டர் போஸ்டரை வெளியிட்ட மார்க் ஆண்டனி படக்குழு

மார்க் ஆண்டனி படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டர்

மார்க் ஆண்டனி படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டர்

ரிதுவர்மா, அபிநயா, ரெடின் கிங்ஸ்லி, சுனில் உள்ளிட்டோரும் படத்தில் இடம்பெற்றுள்ளனர். வித்தியாசமான ஜானரில் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் இந்த படத்தை படக்குழுவினர் உருவாக்கி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India
  • Editor default picture
    reported by :
  • Editor default picture
    published by :Musthak

விஷால் நடிப்பில் உருவாகி வரும் மார்க் ஆண்டனி படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் ஒருவர் இடம்பெற்றுள்ளார். அவரது கேரக்டர் போஸ்டரை படக்குழுவினர் இன்று வெளியிட, அவர் யாரென்று கண்டுபிடிப்பதற்கு ரசிகர்கள் கொஞ்சம் சிரமப்பட்டு வருகின்றனர். லத்தி படத்தை தொடர்ந்து விஷால் தற்போது மார்க் ஆண்டனி என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

இவர்களுடன் ரிதுவர்மா, அபிநயா, ரெடின் கிங்ஸ்லி, சுனில் உள்ளிட்டோரும் படத்தில் இடம்பெற்றுள்ளனர். வித்தியாசமான ஜானரில் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் இந்த படத்தை படக்குழுவினர் உருவாக்கி வருகின்றனர். இந்நிலையில் மார்க் ஆண்டனி படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கும் இயக்குனர் செல்வராகவனின் கேரக்டர் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் சிரஞ்சீவி என்ற கேரக்டரில் செல்வராகவன் நடிக்கிறார்.

அவரை எளிதில் அடையாளம் காண முடியாத வகையில், செல்வராகவனின் கெட்டப் முற்றிலுமாக மாற்றப்பட்டுள்ளது. இன்று செல்வராகவனின் பிறந்த நாளையொட்டி இந்த போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. விஷாலுக்கு கடந்த சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தராத நிலையில் இந்தப் படம் நல்ல வரவேற்பை பெறும் என்ற எதிர்பார்ப்பில் அவரது ரசிகர்கள் உள்ளனர்.

First published:

Tags: Director selvaragavan