ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பரபரனு ஓடுதா? போர் அடிக்குதா? எப்படி இருக்கு லத்தி திரைப்படம்? ட்விட்டர் ரிவியூ இதோ!

பரபரனு ஓடுதா? போர் அடிக்குதா? எப்படி இருக்கு லத்தி திரைப்படம்? ட்விட்டர் ரிவியூ இதோ!

லத்தி

லத்தி

விஷால் - யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் வெளியான பல திரைப்படங்கள் வெற்றியடைந்திருக்கின்றன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

விஷாலின் லத்தி படத்தைப் பார்த்த ரசிகர்கள் ட்விட்டரில் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

அறிமுக இயக்குனர் வினோத்குமார் இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் திரைப்படம் லத்தி. இந்த படத்தில் சுனைனா நாயகியாக நடித்திருக்கிறார். ஆக்சன் பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் செண்டிமெண்ட் விஷயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, விஷால் 10 வயது சிறுவனுக்கு தந்தையாக நடித்திருக்கிறார். அதை மையப்படுத்தி கதைகளம் அமைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். விஷால் - யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் வெளியான பல திரைப்படங்கள் வெற்றியடைந்திருக்கின்றன. அந்த வகையில் இவர்கள் இணைந்துள்ள 15-வது படமாக லத்தி உருவாகியிருக்கிறது. நடிகர்கள் ரமணா, நந்தாவின் RANA புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருக்கும் இப்படம் இன்று வெளியாகியிருக்கிறது. படத்தைப் பார்த்தவர்கள் ட்விட்டரில் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். அவற்றில் சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறோம்.

படத்தில் தேவையில்லாத காட்சிகள் மற்றும் நெகட்டிவ் விஷயங்கள் என எதுவும் இல்லை.

விஷால் அவரது ஸ்டண்ட் மூலம் அசத்துகிறார், படத்தின் பிற்பகுதியில் வரும் ஸ்டண்ட் உங்களை வியக்க வைக்கும்.

முதல் பாதி நன்றாக எழுதப்பட்டுள்ளது.

விஷால் தனது சிறந்த நடிப்பை கொடுத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor vishal