ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விஷாலின் லத்தி படத்திற்கு யூ/ஏ சான்றிதழ்!

விஷாலின் லத்தி படத்திற்கு யூ/ஏ சான்றிதழ்!

லத்தி

லத்தி

விஷால் நடித்துள்ள லத்தி திரைப்படத்திற்கு யுஏ சான்றிதழ். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

விஷால் நடித்த லத்தி திரைப்படத்திற்கு தணிக்கையில் UA  சான்றிதழ் வழங்கப்படுகிறது. 

அறிமுக இயக்குனர் வினோத்குமார் இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் திரைப்படம் லத்தி. இந்த திரைப்படம் வரும் 22ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் படத்தின் டிரைலரை வரும் 10-ம் தேதி பட குழுவினர் வெளியிடுகின்றனர்.

அதே சமயம் லத்தி திரைப்படத்தை தணிக்கை சான்றிதழ் அனுப்பியுள்ளனர். படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர் லத்தி திரைப்படத்திற்கு UA  சான்றிதழ் வழங்கியுள்ளனர்.  விஷால் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் சுனைனா நாயகியாக நடித்திருக்கிறார். ஆக்சன் பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் செண்டிமெண்ட் விஷயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

2023-ம் ஆண்டு விஜய் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தான்... என்ன விஷயம் தெரியுமா?

குறிப்பாக, விஷால் 10 வயது சிறுவனுக்கு தந்தையாக நடித்திருக்கிறார். அதை மையப்படுத்தி கதைகளம் அமைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.  விஷால் - யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் வெளியான பல திரைப்படங்கள் வெற்றியடைந்திருக்கின்றன. அந்த வகையில் இந்த திரைப்படமும் இணையும் என படக் குழுவினர் எதிர்பார்க்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor vishal