Home /News /entertainment /

வெளிவரும் முன்பே வசூலில் வாகை சூடிய விஷால் படம்...!

வெளிவரும் முன்பே வசூலில் வாகை சூடிய விஷால் படம்...!

வீரமே வாகை சூடும்

வீரமே வாகை சூடும்

படத்தின் தமிழ், தெலுங்கு சேட்டிலைட் உரிமை மற்றும் டிஜிட்டல் உரிமைகளை சுமார் பதினேழு கோடிகளுக்கு ஸீ தொலைக்காட்சி வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

  • News18
  • Last Updated :
விஷால் நடித்த படங்கள் சமீபமாக எதுவும் ஓடாத நிலையிலும், தான் தயாரித்து நடித்தப் படத்தை அதிக லாபத்துக்கு விற்றுள்ளார் விஷால். திரையுலகில் இந்த வியாபாரம்தான் ஆச்சரியமாகப் பேசப்படுகிறது.

பிரபல நடிகர்களின் படங்கள் திரையரங்கில் ஓடித்தான் போட்ட பணத்தை எடுக்க வேண்டும் என்ற நிலை தற்போது இல்லை. சேட்டிலைட், டிஜிட்டல், ஓடிடி, இந்தி டப்பிங் என பல்வேறு உரிமைகளின் வழியாக பிரபல நடிகர்களின் படங்களுக்கு கோடிகள் கொட்டுகின்றன. இதனால், படம் வெளியாகும் முன்பே லாபம் பார்த்து விடுகின்றனர்.

விஷாலின் சமீபகால படங்கள் எதுவும் ஓடவில்லை. கடைசியாக வெளியான எனிமி படம்கூட நஷ்டம் என்கிறார் படத்தை தயாரித்த மினி ஸ்டுடியோஸ் வினோத். இந்நிலையில் தனது அடுத்தப் படத்தை வெற்றிகரமாக வியாபாரம் செய்துள்ளார் விஷால்.

அறிமுக இயக்குனர் து.பா.சரவணன் இயக்கத்தில் விஷால் தயாரித்து நடித்திருக்கும் வீரமே வாகை சூடும் படம் ஜனவரி 26 வெளியாகும் என்று அறிவித்திருந்தனர். ஞாயிறு மற்றும் இரவுநேர ஊரடங்குகள் காரணமாக படவெளியீட்டை தள்ளி வைக்க உள்ளனர். அதேநேரம் இந்தப் படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை சுமார் பத்தர கோடிக்கு சுப்பையா சண்முகம் வாங்கியுள்ளார்.

Also read... மகேந்திரன் நடிக்கும் கரா போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி...!

படத்தின் தமிழ், தெலுங்கு சேட்டிலைட் உரிமை மற்றும் டிஜிட்டல் உரிமைகளை சுமார் பதினேழு கோடிகளுக்கு ஸீ தொலைக்காட்சி வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்தி டிஜிட்டல் மற்றும் டப்பிங் உரிமைகளை  சுமார் ஒன்பது கோடிக்கு வாங்கியுள்ளனர். இந்த வியாபாரங்களின் வழியாக மட்டும் சுமார் 36.5 கோடிகள் வசூலாகியுள்ளது. வெளிநாட்டு உரிமை, தெலுங்கு, கன்னட, கேரள உரிமைகள் வழியாக மேலும் சில கோடிகள் கிடைக்கும்.

ஆக, வீரமே வாகை சூடும் வெளியாகும் முன்பே வசூலில் விஷால் வாகை சூடிவிட்டார் என்கிறார்கள் இன்டஸ்ட்ரியில். விஷாலின் அடுத்தப் படமான லத்தியை அவரது நண்பர்கள் நடிகர்கள் ரமணா, நந்தா இணைந்து தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor vishal

அடுத்த செய்தி