• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Vishal: 'வட்டியும் கட்டலை, அசலும் கட்டலை' - விஷால் மீது வருத்தப்பட்ட ஆர்.பி.சௌத்ரி

Vishal: 'வட்டியும் கட்டலை, அசலும் கட்டலை' - விஷால் மீது வருத்தப்பட்ட ஆர்.பி.சௌத்ரி

விஷால் - ஆர்.பி.செளத்ரி

விஷால் - ஆர்.பி.செளத்ரி

இரும்புத்திரை படம் மட்டுமின்றி 2022 இல் எடுக்கப் போகும் துப்பறிவாளன் 2 படத்தின் சேட்டிலைட் உரிமையின் மீதும் ஆர்.பி.சௌத்ரியிடம் கடன் வாங்கியுள்ளார் விஷால்.

  • Share this:
    ஆர்.பி.சௌத்ரியிடம் இரும்புத்திரை படத்துக்காக கடன் வாங்கிய விஷால், கடனை திருப்பிச் செலுத்திய பிறகும் உறுதிமொழிப் பத்திரத்தை ஆர்.பி.சௌத்ரி திருப்பித் தரவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளித்தது அனைவரும் அறிந்ததே.

    விஷால் கடனை திருப்பிச் செலுத்திவிட்டார். அவர் கையொப்பமிட்ட உறுதிமொழிப் பத்திரத்தை இயக்குனர் சிவகுமாரிடம் ஒப்படைத்திருந்தோம். அவர் திடீரென காலமானதால், பத்திரங்கள் கிடைக்கவில்லை. அவை வேறொருவரிடம் கிடைத்தால், அவர்கள் விஷாலிடம் மோசடி செய்ய வாய்ப்புள்ளது. விஷால் காவல்நிலையம் சென்றது சரியே என ஆர்.பி.சௌத்ரி கூறியிருந்தாலும், இத்தனை வருட திரையுலக அனுபவத்தில் யாரும் தன்மீது புகார் அளித்ததில்லை என்ற வருத்தமும் அவரிடம் உள்ளது. விஷால் என்னையும் கலந்தாலோசித்து, இருவருமாகச் சென்று புகார் அளித்திருக்கலாம் என ஆர்.பி.சௌத்ரி கூறியுள்ளார். அதற்கு சரியான காரணம் ஒன்றையும் அவர் தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இரும்புத்திரை படம் மட்டுமின்றி 2022 இல் எடுக்கப் போகும் துப்பறிவாளன் 2 படத்தின் சேட்டிலைட் உரிமையின் மீதும் ஆர்.பி.சௌத்ரியிடம் கடன் வாங்கியுள்ளார் விஷால். அந்த கடனின் வட்டியும் கட்டவில்லை, அசலும் கட்டவில்லை. இப்படியொரு சூழலில், இரும்புத்திரை உறுதிமொழிப் பத்திரத்துக்காக என்னை கலந்தாலோசிக்காமல் காவல்நிலையத்தில் புகார் அளித்துவிட்டாரே விஷால் என்பதுதான் ஆர்.பி.சௌத்ரியின் வருத்தம். ஊடகங்களில் அவரைக் குறித்து வந்த செய்திகள் மனவருத்தம் அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

    ஆர்.பி.சௌத்ரியின் இந்த நியாயமான வருத்தத்துக்கு விஷால் இதுவரை எந்தப் பதிலும் தெரிவிக்கவில்லை.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: