வீரமே வாகை சூடும் - விஷால் வெளியிட்ட அப்டேட்!

விஷால் மற்றும் யோகி பாபு

எனிமி படம் அண்டர் புரொடக்ஷனில் இருக்கையில் மே மாதம் ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் வீரமே வாகை சூடும் படத்தை தொடங்கினார் விஷால்.

  • News18
  • Last Updated :
  • Share this:
வீரமே வாகை சூடும் படம் குறித்த முக்கியமான அப்டேட்டை விஷால் வெளியிட்டுள்ளார்.

எனிமி படம் அண்டர் புரொடக்ஷனில் இருக்கையில் மே மாதம் ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் வீரமே வாகை சூடும் படத்தை தொடங்கினார் விஷால். படத்தின் கதையில் அவருக்கு நம்பிக்கை இருந்ததால், அவரே படத்தை தயாரித்தார். முதலில் சண்டைக்காட்சி எடுக்கப்பட்டது. அதில் விஷாலுக்கு பலத்த காயம் ஏற்பட்டது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடத்தி வந்தவர்கள், சமீபத்தில் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர். டிசம்பரில் படம் வெளியாகும் என அறிவித்தார் விஷால்.

வீரமே வாகை சூடும் ஆக்ஷன் என்டர்டெயினராக தயாராகி வருகிறது. து.பா.சரவணன் என்பவர் இயக்கம். யுவன் படத்துக்கு இசையமைக்கிறார். நாயகியாக  டிம்பிள் ஹயாதி நடித்துள்ளார். பிரகாஷ்ராஜ், பாபுராஜ், யோகி பாபு, மம்தா மோகன்தாஸ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்

Also read...  இணையத்த்தில் வைரலாகும் நடிகை ராசி கண்ணாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

இந்நிலையில், வீரமே வாகை சூடும் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கியதாக நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார் விஷால். இந்த ஷெட்யூல்டுடன் படத்தின் மொத்தக் காட்சிகளும் படமாக்கப்பட்டுவிடும். அத்துடன், டிசம்பர் மாதம் படம் திரைக்கு வருவதையும் விஷால் உறுதி செய்துள்ளார்
Published by:Vinothini Aandisamy
First published: