எனிமி படத்தின் வெளியீடு எப்போது? - அறிவித்தார் விஷால்

விஷால் மற்றும் ஆர்யா

லாபம், கோடியில் ஒருவன் என ஒருசில படங்கள் திரையரங்கில் வெளியாக உள்ளன. அந்த வரிசையில் அக்டோபர் மாத வெளியீட்டில் எனிமி இணைகிறது. 

  • News18
  • Last Updated :
  • Share this:
எனிமி படத்தின் வெளியீடு எப்போது என்பது குறித்த அறிவிப்பை விஷால் வெளியிட்டுள்ளார். 

மினி ஸ்டுடியோ தயாரிப்பில் விஷால், ஆர்யா இணைந்து நடித்திருக்கும் படம் எனிமி. இதன் பெரும்பாலான காட்சிகள் மலேசியாவில் படமாக்கப்பட்டன. எனிமியில் ஆர்யா வில்லனாகவும், விஷால் நாயகனாகவும் நடித்துள்ளனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இரண்டு முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்திருக்கும் படம் என்பதால் எனிமிக்கு எதிர்பார்ப்பு நிலவுகிறது. அரிமா நம்பி, இருமுகன் வெற்றிப் படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் எனிமியை இயக்கியுள்ளார். படத்தின் பாடல்களை தமன் கம்போஸ் செய்ய, சாம் சிஎஸ் பின்னணி இசை அமைத்துள்ளார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு.

Also read... த்ரிஷாவை கைது செய்யுங்கள் - சிவ பக்தர்கள் ஆவேசம்

எனிமி மொத்த படப்பிடிப்பும் முடிந்து தற்போது பின்னணி இசைச்சேர்ப்பும் நிறைவடைந்த நிலையில், அக்டோபர் 14 ஆயுபூஜையை முன்னிட்டு படத்தை வெளியிடுவதாக விஷால் அறிவித்துள்ளார். கொரோனா ஊரடங்குக்குப் பின் இப்போதுதான் திரையரங்குகள் திறக்கப்பட்டு 50 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



லாபம், கோடியில் ஒருவன் என ஒருசில படங்கள் திரையரங்கில் வெளியாக உள்ளன. அந்த வரிசையில் அக்டோபர் மாத வெளியீட்டில் எனிமி இணைகிறது.  திரையரங்குகளுக்கு இது நற்செய்தி.
Published by:Vinothini Aandisamy
First published: