ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

முடிவுக்கு வந்த இழுபறி - தீபாவளிக்கு வெளியாகிறது எனிமி!

முடிவுக்கு வந்த இழுபறி - தீபாவளிக்கு வெளியாகிறது எனிமி!

எனிமி

எனிமி

ஆயுதபூஜையை முன்னிட்டு அக்டோபர் 14 ஆம் தேதி எனிமி வெளியாகும் என முதலில் அறிவித்திருந்தனர். அதே தேதியில் ஆர்யாவின் அரண்மனை 3 படமும் வெளியாவதால் எனிமி பின்வாங்கியது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

ஆயுதபூஜையா, தீபாவளியா... திரையரங்கா, ஓடிடியா என்ற எனிமி படத்தின் இழுபறி ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. தீபாவளிக்கு திரையரங்கில் படத்தை வெளியிடுவது என முடிவு செய்துள்ளனர். 

ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால், ஆர்யா நடித்திருக்கும் படம் எனிமி. மலேசியாவில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. சின்ன வயதில் விஷாலும், ஆர்யாவும் நண்பர்கள். ஆர்யாவின் தந்தை பிரகாஷ்ராஜ் ராணுவ அதிகாரிபோலீஸ் வேலை ஆபத்தானது என்று விஷாலை அவரது தந்தை தம்பி ராமையா சூப்பர் மார்க்கெட் வேலைக்கு திருப்பி விடுகிறார்.

இந்த நேரத்தில் பால்யகால நண்பன் மிகப்பெரிய கொலைகாரனாக வளர்ந்திருக்கிறான். இவர்கள் இருவரும் சந்திக்கும் புள்ளி, ஆர்யாவின் மனைவியை விஷால் கொன்றுவிட்டதற்காக ஆர்யா தவறாக நினைத்து விஷாலை பழிவாங்க முயற்சிப்பது என்று எனிமி கதை எழுதப்பட்டுள்ளது

ஆயுதபூஜையை முன்னிட்டு அக்டோபர் 14 ஆம் தேதி எனிமி வெளியாகும் என முதலில் அறிவித்திருந்தனர். அதே தேதியில் ஆர்யாவின் அரண்மனை 3 படமும் வெளியாவதால் எனிமி பின்வாங்கியது. படத்தை ஓடிடியில் வெளியிடலாம் என்று அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

Also read... சூர்யாவின் ஜெய் பீம் வெளியீட்டு தேதி அறிவிப்பு...!

இந்நிலையில், தீபாவளி வெளியீட்டிலிருந்து வலிமை விலகிக் கொள்ள கிடைத்த இடைவெளியில் எனிமியை வெளியிடுவது என தீர்மானித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்

தீபாவளிக்கு அண்ணாத்த, மாநாடு படங்கள் வருவதாக அறிவித்துள்னர். இப்போது எனிமியும் சேர்ந்திருக்கிறது.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Arya, Actor vishal