Enemy: விரைவில் விஷால் - ஆர்யாவின் ’எனிமி’ டீசர்

Enemy: விரைவில் விஷால் - ஆர்யாவின் ’எனிமி’ டீசர்

விஷால் - ஆர்யா

விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கும் ‘எனிமி’ படத்தின் டீஸர் இரண்டு வாரங்களில் வெளிவரும் என தயாரிப்பாளர் வினோத் தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார்.

  • Share this:
    விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கும் ‘எனிமி’ படத்தின் டீஸர் இரண்டு வாரங்களில் வெளிவரும் என தயாரிப்பாளர் வினோத் தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார்.

    இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் வினோத், "ENEMY புதுப்பிப்புகளைக் கேட்பவர்களுக்கு, படத்தின் 90% முடிவடைந்து விட்டது, பத்து நாட்கள் படப்பிடிப்பு சென்னையில் உள்ளது. அதை விரைவில் முடிக்க திட்டமிட்டு, டீசரை இரண்டு வாரங்களில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். ENEMY டீஸரைப் பார்க்க ஆவலுடன் இருக்கிறீர்களா? காத்திருங்கள்!" என்று தெரிவித்துள்ளார்.



    இருமுகன் பட புகழ் ஆனந்த் சங்கர் இயக்கியுள்ள இப்படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைத்துள்ளார். பாலாவின் ’அவன் இவன்’ படத்துக்குப் பிறகு விஷால் மற்றும் ஆர்யா இந்தப் படத்தின் மூலம் இரண்டாவது முறையாக ஒன்றிணைந்துள்ளனர். எனிமி ஆர்யாவின் 32-வது படம் என்றாலும், இது விஷாலின் 30-வது படம். மிர்னாலினி ரவி இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: