Enemy: விஷால் - ஆர்யாவின் ‘எனிமி’ டீசர் வெளியீடு எப்போது தெரியுமா?

விஷால் - ஆர்யா

பாலாவின் அவன் இவன் படத்துக்குப் பிறகு விஷால், ஆர்யா இணைந்து நடித்திருக்கிறார்கள்.

  • Share this:
    விஷால், ஆர்யா நடித்திருக்கும் எனிமி படத்தின் டீஸர் அனேகமாக வரும் 20-ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    பாலாவின் அவன் இவன் படத்துக்குப் பிறகு விஷால், ஆர்யா இணைந்து நடித்திருக்கும் படம், எனிமி. மினி ஸ்டுடியோஸ் சார்பில் எஸ்.வினோத் குமார் படத்தை தயாரித்துள்ளார். அரிமா நம்பி, இருமுகன், நோட்டா படங்களின் இயக்குனர் ஆனந்த் சங்கர் எனிமியை எழுதி இயக்கியுள்ளார்.

    ஆக்ஷன் படமான இதன் 95 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில், வரும் 20 ஆம் தேதி படத்தின் டீஸரை வெளியிட இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. படம் சம்பந்தப்பட்டவர்கள் இந்தத் தகவலை இன்னும் உறுதி செய்யவில்லை. அதேநேரம், விஷால் ரசிகர்கள் இணையத்தில், ஜுன் 20-ம் தேதி எனிமி டீஸர் வெளியாவதாக உற்சாகமாக பதிவிட்டு வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    எனிமியில் விஷால், ஆர்யாவுடன் மம்தா மோகன்தாஸ், மிருணாளினி, பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். எஸ்.தமன் இசையமைத்துள்ளார். ஆர்.டிராஜசேகர் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    விஷால் நடிப்பில் கடைசியாக வெளிவந்தப் படங்கள் எதுவும் ஓடவில்லை. ஒரு வெற்றி மிக அவசியம் என்ற நிலையில் எனிமி வெளியாக உள்ளது. இதன் ரிசல்டை அறிய விஷால் ஆர்வமாக உள்ளார். தற்போது அவர் தனது புதிய படத்தின் படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்றுள்ளார்.

    எனிமி டீஸர் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: