Vishal: எனிமி முடிஞ்சிடுச்சி - விஷாலின் 'ஹேப்பி' செல்ஃபி!

எனிமி படப்பிடிப்பு தளத்தில்

விஷால் 31 படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடர்ச்சியாக நடந்து வரும் நிலையில், எனிமி படத்தின் பேட்ச் வொர்க் படப்பிடிப்பு அங்கு நடந்தது.

  • Share this:
    எனிமி படப்பிடிப்பு முடிந்ததாக அறிவித்துள்ளார் விஷால். படப்பிடிப்புக் குழுவினருடன் எடுத்துக் கொண்ட செல்ஃபியை வெளியிட்டு இந்தத் தகவலை பகிர்ந்துள்ளார்.

    விஷால் 2018-ல் இரும்புத்திரை வெளியாவதற்கு முன்பிருந்தே ஆக்ஷன் படங்களை மட்டும் தேர்வு செய்து நடிக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான சண்டக்கோழி 2, அயோக்யா, ஆக்ஷன், சக்ரா என அனைத்துமே சுமார் படங்கள். இரும்புத்திரை போன்ற ஒரு வெற்றி தேவைப்படும் நிலையில் இரு படங்களில் நடித்து வருகிறார். இரண்டுமே ஆக்ஷன் படங்கள். ஒன்று எனிமி. இன்னொன்று சரவணன் இயக்கும் விஷாலின் 31-வது படம்.

    விஷால் 31 படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடர்ச்சியாக நடந்து வரும் நிலையில், எனிமி படத்தின் பேட்ச் வொர்க் படப்பிடிப்பு அங்கு நடந்தது. அதில் விஷால் கலந்து கொண்டார். நேற்றுடன் இந்தப் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இயக்குனர் ஆனந்த் சங்கர் உள்ளிட்ட படக்குழுவினருடன் செல்ஃபி எடுத்து, படப்பிடிப்பு நிறைவடைந்த செய்தியை விஷால் பகிர்ந்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    எனிமி ஆக்ஷன் திரைப்படம். அவன் இவனுக்குப் பிறகு விஷால், ஆர்யா இணைந்து நடித்திருக்கிறார்கள். மம்தா மோகன் தாஸ், மிருணாளினி ரவி நாயகிகள். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு தமன் இசையமைக்கிறார். மினி ஸ்டுடியோஸ் எனிமியை தயாரிக்கிறது.

    எனிமி முடிந்த நிலையில், விஷால் தனது 31 படத்தில் கவனம் செலுத்த உள்ளார். இந்த மாத இறுதிவரை ஹைதராபாத்தில் அவர்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: