Enemy: விஷால், ஆர்யாவின் எனிமி சூப்பர் அப்டேட்!

விஷால் - ஆர்யா

எனிமியில் ஆர்யா சம்பந்தப்பட்ட காட்சிகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுவிட்டன. வரும் ஒன்பதாம் தேதி இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்குகிறது.

  • Share this:
    ‘அவன் இவன்’ படத்துக்குப் பிறகு விஷால், ஆர்யா இணைந்து நடித்து வரும் படம், எனிமி. ஆக்ஷன் படமான இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு குறித்து அறிவித்துள்ளார்கள்.

    விஷால் தொடர்ச்சியாக ஆக்‌ஷன் படங்களில் நடித்து வருகிறார். இந்த வருடம் வெளியான சக்ராவும் ஆக்ஷன் படம்தான். ஆனால், ஓடவில்லை. அடுத்து விஷால் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் எனிமி. ரசிகர்கள் இதை ஆர்வமுடன் எதிர்பார்க்கிறார்கள். விஷால், ஆர்யா இணைந்து நடித்திருப்பது ஒரு காரணம் என்றால், படத்தின் இயக்குனர் இன்னொரு காரணம். அரிமா நம்பி, இருமுகன், நோட்டா படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் எனியை இயக்கியுள்ளார். அதிரடியான ஆக்ஷன் படங்களை இயக்குவதில் வல்லவர். அரிமா நம்பியும், இருமுகனுமே சாட்சி.

    எனிமியில் ஆர்யா சம்பந்தப்பட்ட காட்சிகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுவிட்டன. வரும் ஒன்பதாம் தேதி இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்குகிறது. மொத்தம் 8 தினங்கள் திட்டமிட்டிருக்கிறார்கள். ஒரு பாடல் காட்சியும், பேட்ச் வொர்க்கும் எடுக்கப்பட உள்ளன. அது முடிந்தால் பூசணிக்காய் உடைக்க வேண்டியது தான். இறுதிக்கட்ட படப்பிடிப்பை ஹைதராபாத்தில் நடத்துகிறார்கள். விஷால் ஏற்கனவே அங்கு தான் இருக்கிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    விஷாலின் புதிய படத்தின் (விஷால் 31) படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. இந்த மாத இறுதிவரை படப்பிடிப்புக்கு திட்டமிட்டிருக்கிறார்கள். நடுவில் சில தினங்கள் எனிமியில் நடிக்கிறார். எனிமியில் விஷால், ஆர்யாவுடன் மிருணாளினி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ்ராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர். தமன் இசையமைக்க, ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். மினி ஸ்டுடியோஸ் சார்பில் எனிமியை வினோத் குமார் தயாரிக்கிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: