8 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகும் விஷால் - வரலட்சுமி படம்!

8 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகும் விஷால் - வரலட்சுமி படம்!

மதகஜராஜா

நடிகர் விஷால் மற்றும் வரலட்சுமி முதன் முதலாக இணைந்து நடித்த ‘மதகஜராஜா’ திரைப்படம் 8 ஆண்டுகள் கழித்து வெளியாகிறது.

 • Share this:
  நடிகர் விஷால் மற்றும் வரலட்சுமி முதன் முதலாக இணைந்து நடித்த ‘மதகஜராஜா’ திரைப்படம் 8 ஆண்டுகள் கழித்து வெளியாகிறது.

  இயக்குநர் சுந்தர் சி இயக்கிய'மதகஜராஜா' திரைப்படத்தில் முதன் முதலில் விஷால் மற்றும் வரலட்சுமி சரத்குமார் இணைந்து நடித்தனர். சொன்ன நேரத்தில் படத்தை முடித்து கொடுப்பதில் பெயர் பெற்ற சுந்தர்.சி இந்தப் படத்தையும் விரைவாக முடித்தார். ஆனால் சில பிரச்னைகள் காரணமாக தயாரிப்பாளர்கள், ஜெமினி பிலிம் சர்க்யூட் இதன் வெளியீட்டை பல முறை ஒத்திவைத்தது. பின்னர் வெளியிடுவதற்கான யோசனையும் கைவிடப்பட்டது.

  விஷால், சந்தனம், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி, நிதின் சத்யா, சடகோபன் ரமேஷ், சோனு சூட், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட நடிகர்களைக் கொண்டுள்ள 'மதகஜராஜா' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தைத் தூண்டியது. மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசை அமைத்துள்ளார். இதில் நடித்துள்ள நடிகர்களில் கலாபவன் மணி, சிட்டி பாபு, மற்றும் மணிவண்ணன் ஆகியோர் இயற்கை எய்தி விட்டனர்.

  இந்நிலையில் 'மதகஜராஜா' திரைப்படம் நெட்ஃபிளிக்ஸில் வெளியிடப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தயாரிப்பாளர்கள் தங்கள் பிரச்சினைகளை தீர்த்துக் கொண்டதால், ஸ்ட்ரீமிங் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: