ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Lathi: ஆக்‌ஷனுக்கு பஞ்சமில்லாத விஷாலின் லத்தி ட்ரைலர் வெளியீடு!

Lathi: ஆக்‌ஷனுக்கு பஞ்சமில்லாத விஷாலின் லத்தி ட்ரைலர் வெளியீடு!

லத்தி

லத்தி

இசையமைப்பாளர் யுவன், விஷாலுடன் இந்தப் படத்தின் மூலம் 12-வது முறையாக இணைந்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் விஷாலின் லத்தி திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குனர் ஏ.வினோத்குமார் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள லத்தி திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் விஷால் மீண்டும் காக்கி உடையில் நடித்துள்ளார். இப்படம் கிறிஸ்துமஸை முன்னிட்டு, டிசம்பர் 22, 2022 அன்று திரைக்கு வரவிருக்கும் நிலையில், படத்தின் டிரைலரை தயாரிப்பாளர்கள் தற்போது வெளியிட்டுள்ளனர்.

இப்படத்தில் சுனைனா கதாநாயகியாக நடிக்க, மூத்த நடிகர் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். விஷால், காவல் துறையில் லத்தி ஸ்பெஷலிஸ்ட் முருகானந்தம் என்ற கான்ஸ்டபிளாக நடிக்கிறார். வெளியாகியிருக்கும் இரண்டரை நிமிட டிரெய்லர் ஒரு ஆக்‌ஷன் பேக் என்டர்டெயின்னராக தெரிகிறது.

ரஜினிகாந்தும் அவர் கடந்து வந்த முக்கிய சர்ச்சைகளும்!

' isDesktop="true" id="854495" youtubeid="jc1syANigiQ" category="cinema">

ரமணா மற்றும் நந்தாவின் தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, எம் பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். சுவாரஸ்யமாக, இசையமைப்பாளர் யுவன், விஷாலுடன் இந்தப் படத்தின் மூலம் 12-வது முறையாக இணைந்துள்ளார். படத்திற்கு பொன் பார்த்திபன் வசனம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor vishal, Tamil Cinema