முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மீண்டும் இணையும் இயக்குநர் ஹரி - விஷால்: ஹாட்ரிக் கிடைக்குமா?

மீண்டும் இணையும் இயக்குநர் ஹரி - விஷால்: ஹாட்ரிக் கிடைக்குமா?

விஷால் - இயக்குநர் ஹரி

விஷால் - இயக்குநர் ஹரி

ஹரி - விஷால் 3வது முறையாக இணையும் படத்துக்கு யுவன் இசையமைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் விஷால் நடித்த தாமிரபரணி, பூஜை ஆகிய திரைப்படங்களை இயக்குனர் ஹரி இயக்கியிருந்தார். அந்த இரண்டு திரைப்படங்களும் ஆக்சன் பிளஸ் செண்டிமெண்ட் வகையில் எடுக்கப்பட்டிருந்தன.  மேலும் நடிகர் விஷாலின் வெற்றி திரைப்பட வரிசையில் இவ்விரு திரைப்படங்களும் முக்கிய இடத்தில் உள்ளன.  பூஜை திரைப்படத்திற்கு பிறகு விஷாலுடன் ஹரி இணையாமல் இருந்தார்.

இந்த நிலையில் தற்போது ஹரி மற்றும் நடிகர் விஷால் ஆகியோர் மீண்டும் இணைய விருக்கின்றனர்.  இருவருக்கும் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களில் யுவனின் இசை படத்துக்கு பெரும் பக்கபலமாக அமைந்தது. இதன் காரணமாக ஹரி - விஷால் 3வது முறையாக இணையும் படத்துக்கு யுவன் இசையமைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நடிகர் விஷால் தற்போது மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.  அதை முடித்தவுடன் அடங்கமறு படத்தின் இயக்குனர் கார்த்திக் தங்கவேலு இயக்கம் புதிய திரைப்படத்தில் விஷால் நடிக்கிறார்.

அந்த திரைப்படம் மார்ச் மாத இறுதியில் தொடங்கும் என கூறப்படுகிறது. இதனையடுத்து இயக்குனர் ஹரியுடன் விஷால் இணையும் புதிய திரைப்படம் செப்டம்பர் மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது.

First published:

Tags: Actor vishal, Tamil Cinema, Tamil News