Mysskin - Vishal: மிஷ்கின் மீது மீண்டும் குற்றம் சாட்டிய விஷால்

விஷால் - மிஷ்கின்

சமீபத்தில் அளித்த பேட்டியில் மிஷ்கின் மீதான குற்றச்சாட்டை மறுபடியும் புதுப்பித்துள்ளார் விஷால்.

  • Share this:
    துப்பறிவாளன் 2 படம் நின்றுப் போனதற்கு மிஷ்கினே காரணம் என்று மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளார் நடிகர் விஷால்.

    மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா நடிப்பில் 2017-ல் வெளியான படம் துப்பறிவாளன். ஷெர்லாக் ஹோல்ம்ஸையும், அவரது உதவியாளராக வரும் டாக்டர் வாட்ஸனையும் பிரதிபலிக்கும் கதாபாத்திரங்களில் விஷாலும், பிரசன்னாவும் நடித்திருந்தனர். விஷால் நடித்திருந்த, அதிபுத்திசாலியான கொஞ்சம் எக்ஸென்ட்ரிக் குணம் உள்ள தனியார் துப்பறிவாளன் கதாபாத்திரத்துக்கு கணியன் பூங்குன்றன் என தூயத் தமிழில் மிஷ்கின் பெயர் தந்திருந்தார். வினய் வில்லனாக நடித்த இப்படம் சுமார் வெற்றியைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து லண்டனில் இதன் இரண்டாம் பாகத்தை தொடங்கினர். பாதி படம் முடிவதற்குள் மிஷ்கினுக்கும், படத்தை தயாரித்த விஷாலுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    படப்பிடிப்பு தடைப்பட மிஷ்கினே காரணம் என விஷால் சொல்ல, மிஷ்கின் பதிலுக்கு விஷாலை பொறுக்கி என திட்ட, துப்பறிவாளன் 2 பஞ்சாயத்து தெருவுக்கு வந்தது. அதனை அனைவரும் மறந்த நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் மிஷ்கின் மீதான குற்றச்சாட்டை மறுபடியும் புதுப்பித்துள்ளார் விஷால். லண்டனில் மிகவும் தாமதமாக படப்பிடிப்பை ஆரம்பித்து, ஒரு நாளைக்கு ஒரு காட்சியை மட்டுமே எடுத்தார் மிஷ்கின் என விஷால் அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.

    துப்பறிவாளன் 2 படத்தின் மீதிக் காட்சிகளை தானே இயக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார். 2022-ல் அப்படம் திரைக்கு வரும் என்றும் அவர் கூறியுள்ளார். செல்லமே படத்தில் நடிகராக அறிமுகமாவதற்கு முன் விஷாலின் விருப்பம் இயக்குனராவது. அர்ஜுனின் ஜெய்ஹிந்த் முதலான படங்களால் ஈர்க்கப்பட்டு அவரிடம் உதவி இயக்குனராகச் சேர்ந்தார். அதன் பிறகே அவர் நடிகரானார் என்பது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: