Home /News /entertainment /

விஷால் நடிக்கும் ‘லத்தி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!!

விஷால் நடிக்கும் ‘லத்தி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!!

லத்தி படத்தில் விஷால்

லத்தி படத்தில் விஷால்

விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்துள்ளார். படம் ரிலீஸ் குறித்து வெளியிடப்பட்டிருக்கும் போஸ்டர் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

விஷால் நடிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள லத்தி படத்தின் வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள போஸ்டர் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

தென்னிந்திய மொழிகளுடன், இந்தி மொழியிலும் வெளியாகும் பான் - இந்தியா திரைப்படங்கள் அதிகரித்து வருகின்றன. ஒரே கதை, அதே நடிகர்கள்.

ஆனால், படம் பலமொழிகளில் வெளியாகும். இதனால் படம் ஓடினாலும் ஓடாவிட்டாலும் பிற மொழிகளின் சேட்டிலைட், டிஜிட்டல் உரிமையில் கணிசமான கோடிகளை சம்பாதிக்க முடியும். விஷாலின் முதல் பான் - இந்தியா திரைப்படமாக லத்தி உருவாகியுள்ளது.

இதையும் படிங்க - ‘ரஜினி படங்களில் பெண்களை தப்பா காட்டிருக்காங்க’ – ஆர்.ஜே. பாலாஜி பேச்சால் சர்ச்சை

 

அறிமுக இயக்குனர் வினோத் குமார் லத்தி படத்தை இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் லத்தி படம் வெளியாகவுள்ளது.



5 மொழிகளில் வெளியாகும் விஷாலின் முதல் படம் இதுவாகும். இந்நிலையில் ஆகஸ்ட் 12-ம்தேதி லத்தி திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க -  இன்ஸ்டாகிராமில் 10 மில்லியன் ஃபாலோயர்ஸை பெற்ற நடிகர் யாஷ்… கன்னட திரையுலகில் சாதனை

 

படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்துள்ளார். படம் ரிலீஸ் குறித்து வெளியிடப்பட்டிருக்கும் போஸ்டர் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.
Published by:Musthak
First published:

Tags: Actor vishal, Yuvan Shankar raja

அடுத்த செய்தி