• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • அடங்க மறு இயக்குனருடன் இணையும் விஷால்...!

அடங்க மறு இயக்குனருடன் இணையும் விஷால்...!

விஷால்

விஷால்

தனது 33 வது படத்தையும் விஷால் முடிவு செய்துள்ளார். இந்தப் படத்தை அடங்க மறு படத்தை இயக்கிய கார்த்திக் தங்கவேலு இயக்குகிறார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
வாரத்துக்கு ஒரு படத்தை அறிவித்துக் கொண்டிருக்கிறார் விஷால். அட்வான்ஸ் வாங்கி இருக்கிற கடனை அடைத்துவிடுகிற பொறுப்புணர்வு, அவர் படம் ஒப்புக் கொள்ளும் வேகத்தில் தெரிகிறது. 

விஷால் நடிப்பில் அடுத்து எனிமி வெளியாகிறது. முதல்முறையாக அவருடன் ஆர்யா இணைந்து நடித்துள்ளார். கதைப்படி விஷால் ஹீரோ, ஆர்யா வில்லன். ஆனந்த் சங்கர் படத்தை இயக்கியுள்ளார். விரைவில் படம் திரைக்கு வரவுள்ளது. இது அவரது 30 வது படம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதையடுத்து சில மாதங்கள் முன் து..சரவணன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்தார். தற்போது அதன் மொத்த படப்பிடிப்பும் முடிந்து, வீரமே வாகை சூடும் என படத்துக்கு பெயர் வைத்துள்ளனர். போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இது 31 வது படம்.

இதன் படப்பிடிப்பு முடிந்ததும், 32 வது படமாக, தனது நண்பர்கள் ரமணா, நந்தா தயாரிப்பில் புதிய படத்தை பூஜையுடன் தொடங்கினார். வினோத் குமார் என்ற அறிமுக இயக்குனர் படத்தை இயக்குகிறார். சுனைனா நாயகி. தற்போதைய தகவல், தனது 33 வது படத்தையும் விஷால் முடிவு செய்துள்ளார்.

Also read... பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிக்கும் விக்ரம்...!

இந்தப் படத்தை அடங்க மறு படத்தை இயக்கிய கார்த்திக் தங்கவேலு இயக்குகிறார். ஆக்ஷன் த்ரில்லரான இதனை பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: