Home /News /entertainment /

கார்த்தியின் விருமன் இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா?

கார்த்தியின் விருமன் இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா?

விருமன்

விருமன்

விருமன் படத்தின் ஆடியோ வெளியீடு ஆகஸ்ட் 3-ஆம் தேதி மதுரை நகரில் நடைபெற உள்ளதாம்.

    கார்த்தி நடித்துள்ள விருமன் படத்தின் பாடல் வெளியீட்டு விழா ஆகஸ்ட் 3-ம் தேதி மதுரையில் நடப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. 

    இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'கொம்பன்'. நடிகர் கார்த்தி நடித்திருந்த இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்திருந்தார். கிராமத்து கதையை மையப்படுத்திய இந்தப் படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது ஏழு ஆண்டுகள் கழித்து 'விருமன்' படத்தின் மூலம் முத்தையா - கார்த்தி கூட்டணி இணைந்துள்ளது.

    சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் ஹீரோயினாக அறிமுகமாகிறார். கடந்தாண்டு செப்டம்பரில் தொடங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு தேனி மற்றும் மதுரை வட்டாரங்களில் நடைப்பெற்றது.

    இந்நிலையில் அடுத்த வாரம் விருமன் படத்தின் ஆடியோ வெளியீடு நடக்கவிருக்கிறதாம். வெளியாகியுள்ள தகவல்களின் படி விருமன் படத்தின் ஆடியோ வெளியீடு ஆகஸ்ட் 3-ஆம் தேதி மதுரை நகரில் நடைபெற உள்ளதாம். படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    வெற்றிகளை குவித்த வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணி!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தந்தை-மகன் உறவை மையப்படுத்தி இயக்கப்பட்டுள்ள விருமன் படத்தில், ராஜ்கிரண், சூரி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Karthi

    அடுத்த செய்தி