Home /News /entertainment /

யூடியூபில் 20 மில்லியன் பார்வைகளைக் கடந்த கார்த்தியின் விருமன் பட பாடல்…

யூடியூபில் 20 மில்லியன் பார்வைகளைக் கடந்த கார்த்தியின் விருமன் பட பாடல்…

விருமன் படத்தில் கார்த்தி, அதிதி.

விருமன் படத்தில் கார்த்தி, அதிதி.

Viruman Song : செப்டம்பர் 30ம்தேதி கார்த்தி நடித்துள்ள பொன்னியின் செல்வன் வெளியாகவுள்ளது. இதன்பின்னர் தீபாவளியையொட்டி சர்தார் திரைப்படம் வெளியாகிறது

    கார்த்தி நடிப்பில் விரைவில் திரைக்கு வரவுள்ள விருமன் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் யூடியூபில் 20 மில்லியன் பார்வைகளை குறுகிய காலத்தில் கடந்துள்ளது.

    கொம்பன் படத்தின் வெற்றிக்கு பின்னர், இயக்குனர் முத்தையாவுடன் விருமன் மீண்டும் இணைந்திருக்கிறார் நடிகர் கார்த்தி. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி அறிமுகம் ஆகிறார்.

    இவர்களுடன் படத்தில் பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வன்னன், சூரி, கருணாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆகஸ்ட் 31ம் தேதி விருமன் திரைப்படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ‘பொன்னியின் செல்வன் எம்.ஜி.ஆர். நடிக்க வேண்டிய படம்’ – டீசர் வெளியீட்டு விழாவில் மணிரத்னம் பேச்சு 

    யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தை சூர்யா – ஜோதிகாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

    விருமன் படத்திலிருந்து முதல் பாடலாக கஞ்சா பூ கண்ணால லிரிக்கல் வீடியோவாக 1 மாதத்திற்கு முன்பு வெளியிடப்பட்டது. கருமாத்தூர் மணிமாறன் எழுதிய இந்த பாடலை யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து சித் ஸ்ரீராம் பாடியிருந்தார்.

    வெளியானபோதே நல்ல வரவேற்பை பெற்ற இந்தப் பாடல் தற்போது 20 மில்லியன் பார்வைகளை யூடியூபில் கடந்திருக்கிறது.



    செப்டம்பர் 30ம்தேதி கார்த்தி நடித்துள்ள பொன்னியின் செல்வன் வெளியாகவுள்ளது. இதன்பின்னர் தீபாவளியையொட்டி சர்தார் திரைப்படம் வெளியாகிறது. அடுத்தடுத்து பெரிய பட்ஜெட் படங்கள் கார்த்திக்கு வெளியாகவுள்ளதால், அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' படத்தை வெளியிடுகிறது உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ்...

    பொன்னியின் செல்வன் படத்தில் மிக முக்கியமான வந்தியத்தேவன் கேரக்டரில் கார்த்தி நடிக்கிறார். சர்தார் படத்தை இரும்புத்திரை படத்தை அளித்த பி.எஸ். மித்ரன் இயக்கியிருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Karthi

    அடுத்த செய்தி