Home /News /entertainment /

Viruman: பிரபலங்களின் வாழ்த்து மழையில் விருமன்!

Viruman: பிரபலங்களின் வாழ்த்து மழையில் விருமன்!

விருமன்

விருமன்

விருமன் படம் மாபெரும் வெற்றியடைய பிரபலங்கள் பலர் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    இன்று வெளியாகியிருக்கும் விருமன் திரைப்படம் மாபெரும் வெற்றியடைய பிரபலங்கள் பலர் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

    இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'கொம்பன்'. நடிகர் கார்த்தி நடித்திருந்த இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்திருந்தார். கிராமத்து கதையை மையப்படுத்திய இந்தப் படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது ஏழு ஆண்டுகள் கழித்து 'விருமன்' படத்தின் மூலம் முத்தையா - கார்த்தி கூட்டணி இணைந்துள்ளது.

    சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் ஹீரோயினாக அறிமுகமாகிறார். தந்தை-மகன் உறவை மையப்படுத்தி இயக்கப்பட்டுள்ள விருமன் படத்தில், ராஜ்கிரண், சூரி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. விருமன் படம் மாபெரும் வெற்றியடைய பிரபலங்கள் பலர் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அவற்றில் சிலவற்றை இங்கே பதிவிடுகிறோம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    சென்னைக்கு மாற்றப்பட்ட அஜித்தின் ஏகே61 படப்பிடிப்பு



    ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.



    ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் எஸ்.ஆர்.பிரபு வாழ்த்து.



    விருமன் படத்துக்கு இயக்குநர் பாண்டிராஜ் வாழ்த்து.



    நடிகர் மகேந்திரன் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Karthi

    அடுத்த செய்தி