Home /News /entertainment /

விருமன் படத்தின் பாடல் வரிகள் சர்ச்சை… வருத்தம் தெரிவித்தார் பாடலாசிரியர்

விருமன் படத்தின் பாடல் வரிகள் சர்ச்சை… வருத்தம் தெரிவித்தார் பாடலாசிரியர்

விருமன்

விருமன்

2 மாதங்களுக்கு முன்பு வெளியான கஞ்சாப்பூ கண்ணால லிரிக்கல் வீடியோ தற்போது 46 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    விருமன் படத்தின் பாடல் வரிகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதுகுறித்து பாடலாசிரியர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

    கொம்பன் படத்தை தொடர்ந்து, முத்தையாவின் இயக்கத்தில் கார்த்தி விருமன் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கடந்த 12ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி நடித்துள்ளார்.

    மேலும் இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், கருணாஸ், சூரி, ஆர்.கே. சுரேஷ் உள்ளிட்டோர் படத்தில் இடம்பெற்றுள்ளனர்.



    ஆதரவற்றோருடன் இணைந்து பிறந்த நாளை கொண்டாடிய நடிகை பூமிகா – பிரபலங்கள் வாழ்த்து

    படத்தில் இடம்பெற்றுள்ள கஞ்சாப்பூ கண்ணால, மதுரவீரன் உள்ளிட்ட பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. தற்போது விருமன் படத்திலிருந்து வீடியோ பாடல்கள் வெளியிடப்பட்டு வருகிறது. சமீபத்தில் வானம் கிடுகிடுங்க என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

    இதற்கிடையே, கஞ்சாப் பூ கண்ணால பாடல் வரி சர்ச்சையை ஏற்படுத்தியது. பாடலில் கஞ்சாவை பயன்படுத்தலாமா, இது போதையை ஊக்கப்படுத்துவது போல் உள்ளதே என சர்ச்சை கிளம்பியது.



    இதற்கு பதில் அளித்துள்ள பாடலின் ஆசிரியர் மணிமாறன், கஞ்சாப் பூ என போதைப் பொருளுடன் ஒப்பிட வில்லை என்று கூறியுள்ளார். பாடல் வரிகளில் உள்நோக்கம் ஏதும் இல்லை என்று தெரிவித்துள்ள அவர், வரிகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டால் அதற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

    ஹீரோயினாக அறிமுகமாகும் அஜித் படங்களின் குழந்தை நட்சத்திரம்…

    2 மாதங்களுக்கு முன்பு வெளியான கஞ்சாப்பூ கண்ணால லிரிக்கல் வீடியோ தற்போது 46 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. கடந்த வாரம் திரைக்கு வந்த விருமன் திரைப்படம் ரூ. 40 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    உறவுகளை விவரிக்கும் கிராமத்து கதைக் களம் கொண்ட விருமன் படத்தில், கார்த்தி, பிரகாஷ் ராஜ், அதிதி ஷங்கர்,சூரி, ராஜ் கிரண், சிங்கம் புலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தை சூர்யா – ஜோதிகாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Karthi

    அடுத்த செய்தி