Home /News /entertainment /

கார்த்தியின் விருமன் படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சி இருக்கிறதா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு...

கார்த்தியின் விருமன் படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சி இருக்கிறதா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு...

விருமன் படத்தில் கார்த்தி.

விருமன் படத்தில் கார்த்தி.

சரவணனின் லெஜெண்ட், கே.ஜி.எஃப். 2 படங்களுக்கு அதிகாலை 4 மணிக்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விருமன் படத்தின் சிறப்பு காட்சியை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள விருமன் படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சிகள் இருக்குமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் வெளிவந்த சரவணனின் லெஜெண்ட், கே.ஜி.எஃப். 2 படங்களுக்கு அதிகாலை 4 மணி காட்சிகள் இடம் பெற்ற நிலையில், தற்போது வரை விருமனுக்கு 4 மணி காட்சிகள் இல்லையென்றே தகவல்கள் வெளிவந்துள்ளன.

    கார்த்தி ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப 4 மணி காட்சிகள் ஏற்பாடு செய்யப்படுமா என்பது தற்போது வரையில் உறுதி செய்யப்படவில்லை.

    கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், சூரி, ஆர்.கே. சுரேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் விருமன் திரைப்படம் உருவாகியுள்ளது. பருத்தி வீரன், கடைக்குட்டி சிங்கம், கொம்பன் படங்களைத் தொடர்ந்து கிராமத்து கதையில் நடித்துள்ளார் கார்த்தி.

    Jailer: ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் தமன்னா?

    சமீபத்தில் வெளியிடப்பட்ட படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. கேமரா, எடிட்டிங், கலை என படத்தின் அனைத்து டிபார்ட்மென்டுகளும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர் என்று இயக்குனர் ஷங்கரே பாராட்டியிருந்தார்.



    யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள விருமன் படத்திலிருந்து 3 பாடல்கள் வெளிவந்து ஹிட்டாகியுள்ளன. டைட்டில் பாடலை இளையராஜா பாடியுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    Laal Singh Chaddha Review : பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெறும் ஆமிர் கானின் லால் சிங் சத்தா திரைப்படம்…

    விருமன் ட்ரெய்லரைப் பார்க்க...



    எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் விருமன் திரைப்படம் நாளை வெளியாகிறது. இதையொட்டி அதிகாலை 4 மணி காட்சியை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். ஆனால் தற்போது வரையில் அதுகுறித்த அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.



    சரவணனின் லெஜெண்ட், கே.ஜி.எஃப். 2 படங்களுக்கு அதிகாலை 4 மணிக்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு காட்சியை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இதுபற்றிய அறிவிப்பை அவர்கள் எதிர்பார்த்துள்ளார்கள்.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Karthi

    அடுத்த செய்தி