ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

என் வழி ஜோதிகா வழி.. ஆச்சரியம் தந்த நடிகர் சூரியின் பேச்சு!

என் வழி ஜோதிகா வழி.. ஆச்சரியம் தந்த நடிகர் சூரியின் பேச்சு!

சூரி - ஜோதிகா

சூரி - ஜோதிகா

ஜோதிகாவை போலவே நடிகர் சூரியும் தற்போது கோவில் குறித்து பேசி ’என் வழி ஜோதிகா வழி’ என சொல்லியுள்ளார்..

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கோவிலை கட்டுவதை விடவும் பள்ளிக்கூடங்களை கட்டலாம் என சொன்ன ஜோதிகாவின் வழியிலேயே நகைச்சுவை நடிகர் சூரியும் குரல் கொடுத்த விஷயம் கோலிவுட்டில் பேசு பொருளாகியுள்ளது. 

தமிழ் திரையுலகில் சோனாவாய் அறிமுகமாகி மக்களால் பொன் மகளாய் கொண்டாடப் பட்டவர் ஜோதிகா. ஆரம்பகாலங்களில் ஒரு சராசரி கதாநாயகியாய் வலம் வந்த ஜோதிகா தனது இரண்டாம் இன்னிங்ஸில் தனியார் பள்ளியில் நடக்கும் கொள்ளைகளை துணிவுடன் எதிர்த்து கேள்வி கேட்கும் தலைமை ஆசிரியராக ‘ராட்சசி’, குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளை எதிர்த்து போராடும் பெண்ணாக ‘பொன் மகள் வந்தாள்’ என மக்கள் பாராட்டும் கதையின் நாயகியாக உருவெடுத்தார்.

விருமன் பட இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா - சுவாரஸ்ய தகவல்கள்!

ரீலில் மட்டுமல்லாமல் ’கோயில் உண்டியலில் காசு போடாதீர்கள்.. அதற்கு பதிலாக மருத்துவமனை மற்றும் பள்ளிக்கூடம் கட்டுங்கள் என சொல்லி ரியலிலும் மக்களின் பொன் மகள் ஆனார் ஜோதிகா. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த விருது விழாவில் பங்கேற்ற ஜோதிகா, தஞ்சை பெரிய கோவில் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கினார். ‘கோயில் கட்டுவதற்கெல்லாம் இவ்வளவு செலவுகள் செய்ய வேண்டுமா? கோயில் உண்டியலில் காசு போடாதீர்கள். அதற்கு பதில் பள்ளிக்கூடங்களை கட்டலாம், மருத்துவமனைகளை பராமரிக்கலாம்’ என்று பேசி சர்ச்சையின் நாயகி ஆனார்.

களவாணி சூரியாய் திரை ரசிகர்களால் அறியப்பட்டு பின் பரோட்டா சூரியாய் காமெடியில் கதகளி ஆடிக் கொண்டிருக்கும் நடிகர் சூரி. குறுகிய காலத்திலேயே அஜீத், விஜய் போன்ற டாப் ஹீரோக்களின் காமெடி தோஸ்தும் ஆகி நகைச்சுவை நாயகனும் ஆனார் சூரி.

ஜோதிகாவை போலவே நடிகர் சூரியும் தற்போது கோவில் குறித்து பேசி ’என் வழி ஜோதிகா வழி’ என சொல்லியுள்ளார்.. முத்தையா இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘விருமன்’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சூரி, நடிகர் சூர்யா செய்து வரும் கல்வி உதவிகள் பற்றி பேசுகையில் ’ஆயிரம் கோவில்களை கட்டுவதை விடவும்… ஆயிரம் அன்ன சத்திரங்களை கட்டுவதை விடவும் ஒரு மாணவருக்கு படிப்பிற்கு உதவுவது காலம் கடந்தும் பேசும்’ என பாராட்டி பேசி முன்னர் பேசிய ஜோதிகாவின் குரலுக்கு தன் ஆதரவு குரலை கொடுத்தார்.

கடவுள் இல்லை என்றவரின் சிலையை உடைக்க வேண்டும் - கனல் கண்ணன் சர்ச்சை பேச்சு.. பாய்ந்தது வழக்கு

கோவில்களை பற்றி சூரி இப்படி பேசியதில் சிலர் சர்ச்சை தீயை பற்ற வைக்க முனைந்தாலும் அவர் பேச ஆரம்பிக்கையில் ‘மதுரை மீனாட்சி அம்மன் அருளால் எல்லோரும் நல்லா இருப்பீங்க; என சொன்னது அச்சர்ச்சை தீயை தண்ணீராய் அணைக்கும் என்பதில் ஐயமில்லையே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Karthi, Actor Soori, Actor Surya, Actress Jothika