விக்ரம் பிரபுவின் மகனை வாழ்த்திய விராட் கோலி - வைரலாகும் வீடியோ

விக்ரம் பிரபுவின் மகனை வாழ்த்திய விராட் கோலி - வைரலாகும் வீடியோ
விராத் கோலி
  • News18
  • Last Updated: September 3, 2019, 3:32 PM IST
  • Share this:
விக்ரம் பிரபுவின் மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறி வீடியோ வெளியிட்டுள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி.

நடிகர் விக்ரம் பிரபு தற்போது வானம் கொட்டட்டும் படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் மணிரத்னத்திடம் உதவியாளராக பணியாற்றிய தனசேகரன் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்துக்கு கதை எழுதிய மணிரத்னம் அவரே தயாரிக்கிறார்.

மடோனா செபாஸ்டியன் விக்ரம்பிரபுவுக்கு ஜோடியாக நடிக்க மற்றொரு கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். இவர்களுடன் ராதிகா, சரத்குமார், சாந்தனு, நந்தா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.


வானம் கொட்டட்டும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விக்ரம் பிரபுவின் மகன் விராட்டுக்கு பிறந்தநாள் கூறியுள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி.

இதை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள விக்ரம் பிரபு, கோலிக்கு நன்றியும் தெரிவித்துள்ளார். விக்ரம் பிரபுவின் ட்வீட்டைப் பார்த்த ரசிகர்கள் அவரது மகன் விராட்டுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.கடந்த 2017-ம் ஆண்டு விராட் பிறந்தநாளுக்கு பாகுபலி புகழ் நடிகர் பிரபாஸ் குட்டி வாள் ஒன்றை பரிசளித்ததும் குறிப்பிடத்தக்கது.

வீடியோ பார்க்க: ரஜினி காந்த் நடிக்கும் புதிய திரைப்படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா?

First published: September 3, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...