புஷ்பா படத்தில் இடம்பெற்றுள்ள ஊ சொல்றியா பாடலுக்கு பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலி போட்ட குத்தாட்டம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இதுதொடர்பான பதிவை நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.
அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான புஷ்பா திரைப்படம் இந்தியா முழுவதும் வரவேற்பை பெற்றது. படத்தில் இடம் பெற்ற ஸ்ரீ வள்ளி பாடல், அல்லு அர்ஜுனின் தெக்கதெலெ டயலாக் உள்ளிட்டவற்றை சினிமா ரசிகர்கள் இன்ஸ்டா ரீல் செய்து அல்ட்ரா வைரல் ஆக்கினர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஆல் ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல்லுக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இதையொட்டி நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் விராட்கோலி உள்ளிட்ட பெங்களூரு அணி வீரர்கள் பங்கேற்றனர்.
வரவேற்பு நிகழ்ச்சி ஆட்டம் பாட்டத்துடன் களைகட்டியபோது, புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா மாமா ஊஊ சொல்றியா பாடலின் தெலுங்கு வெர்ஷனுக்கு விராட் கோலி குத்தாட்டம் போட்டார். இதனை அவரது ரசிகர்களே எதிர்பார்க்கவில்லை.
Virat Kohli dancing for pushpa song - Oo antava song - The never ending mania of PUSHPA 🔥#Pushpa @AlluArjun pic.twitter.com/M9hU0T1yj1
— sumanth ッ (@SumanthOffl) April 28, 2022
விராட் கோலியின் இந்த டான்ஸ் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ள நிலையில், இதுதொடர்பான ஃபோட்டோவை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதேபோன்று மேக்ஸ்வெல் திருமண வரவேற்பில் கலந்து கொண்ட புகைப்படத்தை அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை 38 லட்சம் பேர் லைக் செய்துள்ளார்கள்.
இதையும் படிங்க - நடிகர் விஜய்க்கு பிடித்த டிவி நிகழ்ச்சி இதுதானாம்...
சுகுமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுன் - ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முன்னணி கேரக்டரில் நடித்திருந்தனர். வசூல் ரீதியிலும் விமர்சன ரீதியிலும் பெரும் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இந்தாண்டு இறுதிக்குள் வெளியாகும் எனறு எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Allu arjun, Samantha