முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / தெருவில் இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை - நிஜ ஹீரோவாக மாறிய பிரபல நடிகர் - வைரல் வீடியோ

தெருவில் இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை - நிஜ ஹீரோவாக மாறிய பிரபல நடிகர் - வைரல் வீடியோ

நாக சவுர்யா

நாக சவுர்யா

இது தன் படத்தை விளம்பரப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட போலியான நிகழ்வு என்றும் சிலர் நாக சவுர்யாவை கலாய்த்துவருகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இயக்குநர் விஜய்யின் தியா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் தெலுங்கு நடிகர் நாக சவுர்யா. சமீபத்தில் தெருவில் இளம்பெண்ணுக்காக இளைஞர் ஒருவருடன் சண்டையிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

அந்த வீடியோவில் இளைஞர் ஒருவரின் கையைப் பிடித்து அவருக்கு அருகில் இருக்கும் பெண்ணிடம் மன்னிப்பு கேட்க சொல்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. நாக சவுர்யாவை நிஜ ஹீரோ என ரசிகர்கள் பாராட்டிவருகிறார்கள்.

சம்பவத்தன்று நடுத்தெருவில் இளைஞர் ஒருவர் பெண்ணின் கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்த நடிகர் நாக சவுர்யா அந்த இளைஞரிடம் பெண்ணை அடிப்பது தவறு என்றும் உடனடியாக மன்னிப்புக் கேட்கும்படியும் கூறியிருக்கிறார்.

அதற்கு அந்த இளைஞ|ர் அவர் எனது கேர்ள் பிரெண்ட் தான் எனக் கூற, யாராக இருந்தாலும் அடிப்பது தவறுதான் என நாக சவுர்யா பதிலளித்திருக்கிறார். அப்போது கூட்டம் கூடவே வேறு வழியில்லாமல் இளைஞர் மன்னிப்புக்கேட்டார்.

இந்த நிலையில் இது தன் படத்தை விளம்பரப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட போலியான நிகழ்வு என்றும் சிலர் நாக சவுர்யாவை கலாய்த்துவருகின்றனர்.

First published:

Tags: Viral Video