வாரிசு படமும் துணிவு படமும் வருகிற 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு பொங்கலுக்கு அஜித்தின் வீரமும் - ஜில்லா படமும் வெளியாகியிருந்தது. கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பிறகு இருவரது படங்களும் ஒன்றாக வெளியாகிறது. பொதுவாகவே இரு தரப்பு ரசிகர்களும் சமூக வலைதளங்களில் மோதிக் கொள்வது வழக்கம். தற்போது அது இன்னும் உக்கிரமடைந்துள்ளது.
எந்த படத்தின் டிரெய்லர் அதிக வியூஸ்களைப் பெற்றிருக்கிறது என்பதிலிருந்து எந்தப் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு, மொத்த வசூல் எவ்வளவு என்பது வரை இந்த மோதல் தொடர்ந்து கொண்டே இருக்கும். எந்தப் படத் தயாரிப்பாளர்களும் தங்கள் படங்கள் எவ்வளவு வசூலித்துள்ளது என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதில்லை. சமூக வலைதளங்களில் தோராயமாக வெளியாகும் தகவல்களை வைத்தே இரு தரப்பு மோதிக்கொள்வது வழக்கமாகியுள்ளது. மற்றொரு பக்கம் இரு தரப்பு ரசிகர்களும் நடிகர்களின் தோற்றங்களை கலாய்க்கும் அளவுக்கு மோசமாக நடந்துகொண்டுவருகின்றனர்.
இந்த நிலையில் துணிவு குறித்து சமீபத்தில் இயக்குநர் வினோத் அளித்த பேட்டி ஒன்றில் ரசிகர்களின் மோதல் போக்கு குறித்து பேசியுள்ளார். அதில், ''சிம்பிளா யோசிச்சோம்னா இரண்டு படங்கள் வருது. 5, 6 நாட்கள் விடுமுறை இருக்கிறது. குறைந்தது 2 வாரங்கள் அந்தப் படங்கள் ஓடப்போகுது. வேலைக்கு போய் சம்பாதிக்கிறவங்க, ரெண்டு படங்கள் பார்க்கணும்னு நினைக்கிறவங்க, தியேட்டர் போய் பார்க்கலாம். இல்ல ஒரு படம் தான் பார்க்கணும்னா பார்க்கலாம். இல்லனா ஓடிடி இருக்கு. அதுல வந்து பாருங்க. யாரும் எதையும் தடுக்க முடியாது. ரெண்டு பேருக்கும் வெற்றி கிடைக்கணும், ரெண்டு படங்களுக்கும் லாபம் கிடைக்கணும்.
"ரசிகர்கள் சினிமாவுக்கு இவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டியதில்லை!" - இயக்குநர் ஹெச்.வினோத்#HVinoth | #Thunivu | #AjithKumar pic.twitter.com/Z8l0Bq8mQ5
— சினிமா விகடன் (@CinemaVikatan) January 7, 2023
இங்க 15 டாப் நடிகர்கள் இருக்காங்க. அவங்களோட ரசிகர்கள் பண்ற அளவுக்கு ரூ.100 கோடி செலவழிச்சா கூட இப்படி விளம்பரப்படுத்த முடியாது. ஆனா திருப்பி ரசிகர்களுக்கு அந்த நடிகர்களாலும், தயாரிப்பு நிறுவனத்தாலும் என்ன பண்ண முடியும்? டாக்டர் ராமதாஸ், திருமாவளவன் உள்ளிட்டோர் கூட டூ மச் சினிமானு சொல்றாங்க இல்லையா? அது உண்மை. இவ்ளோ நேரம் சினிமாவுக்கு செலவிட வேண்டியது இல்லை. ஒரு படம் நல்லா இருக்குனு சொன்னா போய் பார்க்கலாம். அதை நாலு பேருக்கு சொல்லலாம். இவ்ளோ தான் சினிமாவுக்கு நீங்க செலவு பண்ண வேண்டிய நேரம். இந்த நேரத்தை யாராலும் மீட்டுத் தர முடியாது. உங்கள் நேரத்தை உங்களை விட வேறு யாராலும் சிறப்பா பயன்படுத்த முடியாது என்று பேசினார். வினோத்தின் கருத்துக்கு பாராட்டுக்கள் குவிந்துவருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.