Union
Budget 2023

Highlights

ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

''துணிவு கதை இதுதான்...'' - போட்டு உடைத்த இயக்குநர் ஹெச்.வினோத்!

''துணிவு கதை இதுதான்...'' - போட்டு உடைத்த இயக்குநர் ஹெச்.வினோத்!

அஜித் குமார்

அஜித் குமார்

இன்னைக்கு எகனாமிக்ஸ் தான் போர். ஒரு நாட்டை நீங்கள் கன்ட்ரோல் பண்ண தேவை பணம் தான். பணம் இப்போ பிரிண்டிங் பேப்பரா இருந்து இப்போ டிஜிட்டலா மாறிடுச்சு.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

தமிழ்நாட்டில் இப்பொழுது அதிகம் விவாதிக்கப்படும் தலைப்புகளில் முதலிடத்தில் இருப்பது வாரிசா ? துணிவா ? என்பது தான். இரண்டு படங்களும் வெளியாகும் தேதி நெருங்க, நெருங்க விவாதங்கள் சூடுபடிக்கத் துவங்கியுள்ளன. எந்த டிரெய்லருக்கு அதிக வியூஸ் என்பதில் துவங்கி எந்தப் படத்துக்கு பெரிய கட் அவுட்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. எந்தப் படத்தின் முதல் நாள் வசூல் அதிகம் என விவாதங்கள் நீண்டு கொண்டே இருக்கும். அடுத்த ஓரிரு மாதங்களுக்கு இந்த நிலைதான் நீடிக்கும்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு இரண்டு நடிகர்களின் படங்களின் ஒரே தினத்தில் வெளியாகிறது என்பதுதான் காரணம். கடந்த சில ஆண்டுகளாக அஜித்தின் படங்கள் பெரிய புரமோஷன்கள் இல்லாமலே வெளியாகின. ஆனால்  துபாயில் வானத்தில் போஸ்டர் பறக்கவிடப்பட்டது என இந்த முறை புரமோஷன்களில் அதிகம் கவனம் செலுத்திவருகின்றனர் துணிவு படக்குழு. காரணம் வாரிசுடன் துணிவு வெளியாவதுதான் எனக் கூறப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக அஜித் நடித்திருக்கும் துணிவு திரைப்படத்தை 11ஆம் தேதி அதிகாலை ஒரு மணிக்கும், விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தின் சிறப்பு காட்சியை அதிகாலை 4 மணிக்கும் திரையிட விநியோக நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளன. இரண்டு தரப்பு ரசிகர்களும் மோதிக்குள்ளக் கூடாது என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக அஜித் - விஜய் படங்கள் ஒரே நாளில் வெளியானால் திரையரங்குகளில் ரசிகர்கள் மோதிக்கொண்ட சம்பவங்களை நாம் கேள்விப்பட்டிருப்போம்.

இந்த நிலையில் துணிவு பட இயக்குநர் வினோத் படத்தின் கதை குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. அதில், ''போர் என்பது இப்போ மாறிட்டே இருக்கு. இன்னைக்கு எக்னாமிக்ஸ்தான் போர். ஒரு நாட்டை நீங்கள் கன்ட்ரோல் பண்ண தேவை பணம் தான். பணம் இப்போ பிரிண்டிங் பேப்பரா இருந்து இப்போ டிஜிட்டலா மாறிடுச்சு. டிஜிட்டல் உலகத்துல ஒருத்தர் கிட்ட இருந்து பணம் வாங்குறதுக்கு ஒரு அறம் இருக்கு. ஒருத்தருக்கு பொருளை கொடுத்து பணம் வாங்கிக்கிறது அடிப்படை வியாபாரம். ஆனால் ஒருத்தன் கிட்ட பொய் சொல்லி, ஏமாத்தி வாங்குற போர் இப்போ நடந்துட்டு இருக்கு. உழைச்சு சம்பாதிக்கிறவங்க, தங்களுடைய பணத்தைு் பாதுகாக்கணும் இல்லையா? அதை அடிப்படையா வச்சுகிட்டு துணிவு படத்தின் கதையை பண்ணியிருக்கோம்” என்றார்.

First published:

Tags: Actor Ajith, Thunivu, Vinoth