வினித் சீனிவாசன் நடித்திருக்கும் 'முகுந்தன் உன்னி அசோசியேட்' என்ற மலையாள திரைப்படம் வெளியாகி உள்ளது. பணத்திற்காக எந்த தவறையும் செய்யும் வழக்கறிஞராக அவர் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தை பற்றி பார்க்கலாம்.
மலையாளத்தில் படத்தொகுப்பாளராக இருந்த அபினவ் சுந்தர் நாயக் என்பவர் 'முகுந்தன் உன்னி அசோசியேட்' திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் வினித் சீனிவாசன், அர்ஷா பைஜு, சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
வழக்கறிஞராக தன்னுடைய வாழ்க்கையில் வெற்றியடைய நினைக்கும் நபரின் வாழ்க்கையும், அவரின் செயல்பாடுகளுமே 'முகுந்தன் உன்னி அசோசியேட்' திரைப்படம்.
36 வயதில் திருமணம் ஆகாமல் வாழ்க்கையிலும், வெற்றியடையாமல் இருக்கும் வினித் சீனிவாசனுக்கு, போலி விபத்து காப்பீட்டு மோசடி குறித்து தெரிய வருகிறது. அதற்குப் பிறகு அவர் என்னவெல்லாம் செய்கிறார்? அதனால் பலனடைவது யார்? பாதிக்கப்படுவது யார்? என்பது அடுத்தடுத்த காட்சிகளில் கிளைமாக்ஸ் வரை நகர்கிறது.
விபத்துக்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களை பயன்படுத்தி ஆம்புலன்ஸ் ஓட்டுநர், மருத்துவர், காவல்துறையினர் போன்றோரின் உதவியுடன் போலி விபத்து காப்பீடு முறைகேட்டில் ஈடுபடுகிறார் வினித். அதில் அவருக்கு நிறைய பணம் கிடைக்கிறது. அதேசமயம் இதை அவருக்கு அறிமுகப்படுத்தியவருடன் போட்டியும் ஏற்படுகிறது. அந்தப் போட்டிக்காக வினித் செய்யும் செயல் கொடூரமானது. அந்த செயலையும் கவித்துவமாக பார்க்கிறார்.
வினித் கதாபாத்திரம் செய்யும் ஒவ்வொரு செயலும் வித்தியாசமாக இருக்கிறது. குறிப்பாக டிரைவர் சீட்டிற்கு மட்டும் ஏர்பேக் இருக்கும் Second Hand காரை வாங்குகிறார். பணம் குறைவாக இருப்பதால் அப்படி வாங்குவதாக தெரியும், ஆனால் அதையும் உள்நோக்கத்துடன்தான் வாங்கியிருப்பாரோ என்று படம் பார்ப்பவர்களுக்கு தோன்ற வைக்கும். அந்த அளவிற்கு அவரின் செயல்பாடுகள் காட்சிகளில் விரிந்துகொண்டே செல்லும்.
இந்தப் படம் தவறான முறையில் பணம் சம்பாதிக்கும் சம்வங்களையம்யும், குற்றங்களையும் வழக்கறிஞர் வாழ்க்கை பின்னணியில் சொன்னாலும், அதை காமெடியாக கூறியுள்ளனர். அதுவும் Smoking Card போடுவதில் இருந்தே அந்த முறையை பின்பற்றியுள்ளார் இயக்குனர்.
அத்துடன் இந்த கதையை முழு திரையில் சொல்ல தேவையில்லை, இந்த அளவிற்கு சொன்னால் போதும் என்ற காண்பித்தே முழு படத்தையும் எடுத்துள்ளார். அதேசமயம் யோசிக்கவும் வைத்துள்ளார் இயக்குனர். ஒரு கட்டத்தில் என்ன ஆகபோகிறது? என்ன செய்ய போகிறார்? வினித்தால் அவருடன் இருப்பவர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்றும் பார்ப்பவர்களுக்கு நிச்சயம் தோன்றும். அந்த இடத்தில் இயக்குனர் வெற்றியடைந்துள்ளார்.
இந்த திரைப்படத்தில் வினித் சீனிவாசனின் கதாபாத்திரத்திற்கு மைண்ட் வாய்ஸ் மற்றும் ரியல் என இரண்டு வகையில் வசனம் எழுதப்பட்டுள்ளது. அதில் மைண்ட் வாய்ஸ் வசனம், அவர் முயற்சித்தும் வெற்றியடையாததால் இந்த செயலை செய்கிறார் என்பது போன்ற வகையில் எழுதப்பட்டுள்ளது.
சிவாஜி, ரஜினிக்கு சில்வர் ஜுப்லி ஹிட் தந்த ஆப்கானிஸ்தான் காதர் கான்!
ஒரு படத்தின் நாயகன் நல்ல விஷயங்களை மக்களுக்கும், ரசிகர்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்பார்கள். ஆனால் இந்தப் படத்தின் நாயகனாக வரும் வினித், லட்சியத்தை அடைய வேண்டும் என்றால் தவறுகளும் சரியே என்று கூறுகிறார்.
'முகுந்தன் உன்னி அசோசியேட்' படம் மலையாளத்தில் எடுக்கப்பட்டுள்ளதால் எந்த பிரச்னையும் இல்லாமல் வெளியாகியுள்ளது. இதுவே வேறு மொழிகளில் எடுக்கப்பட்டிருந்தால் பல எதிர்ப்புகளை நிச்சயம் சந்தித்திருக்கும்.
திரையரங்கில் இன்று வெளியானது சமந்தாவின் ’யசோதா’ : படம் எப்படி இருக்கு?
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Mollywood, Movie review