தாயும் மகளும் என் விருப்பப்படி நடக்க வேண்டும்...! பாலியல் புகாரை ஒப்புக் கொண்ட வில்லன் நடிகர்?

தாயும் மகளும் என் விருப்பப்படி நடக்க வேண்டும்...! பாலியல் புகாரை ஒப்புக் கொண்ட வில்லன் நடிகர்?
நடிகர் விநாயகன்
  • News18
  • Last Updated: November 9, 2019, 6:45 PM IST
  • Share this:
சமூக ஆர்வலரும் மாடலுமான மிருதுளா தேவி கூறிய பாலியல் குற்றச்சாட்டை நடிகர் விநாயகன் ஒப்புக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மலையாள திரையுலகின் முன்னணி நடிகராக வலரும் விநாயகன், தனுஷ் நடித்த மரியான், சிம்புவுடன் சிலம்பாட்டம், விஷாலின் திமிரு உள்ளிட்ட ஒரு சில தமிழ்ப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் மீது சமூக ஆர்வலரும் மாடலுமான மிருதுளா தேவி #Metoo புகார் கூறியிருந்தார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள விநாயகனை அழைத்த போது, தன்னிடம் ஆபாசமாகப் பேசியதாகவும், தன்னை மட்டுமல்லாது தன்னுடைய தாயாரையும் அவர் விரும்பும்படி நடந்துகொள்ள வேண்டும் என்று வினாயகன் கூறியதாக கல்பட்டா காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் கைது செய்தனர். பின்னர் ஜாமினில் வெளியே வந்தார் விநாயகன்.


இந்நிலையில் கடந்த 7-ம் தேதி அவர் மீது கல்பட்டா நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் மிருதுளா தேவி கூறிய பாலியல் குற்றச்சாட்டை நடிகர் விநாயகன் ஒப்புக் கொண்டதாக கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணை கல்பட்டா நீதிமன்றத்தில் அடுத்த மாதம் முதல் நடக்க உள்ளது. மேலும் இந்த வழக்கில் குற்றத்தை ஒப்புக் கொண்டதால் அவருக்கு ஒருவருடம் சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
First published: November 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்