Home /News /entertainment /

நடிகர் விஜய்யின் சார்பில் வெளியான விநாயகர் சதுர்த்தி வாழ்த்து!

நடிகர் விஜய்யின் சார்பில் வெளியான விநாயகர் சதுர்த்தி வாழ்த்து!

விஜய்

விஜய்

நடிகர் விஜய்யின் சார்பில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
நடிகர் விஜய்யின் சார்பில் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது.  இதைத்தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சார்பில் அவரது மக்கள் இயக்கம் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளது.

விஜய் மக்கள் இயக்கத்தின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில், தளபதி விஜய் அவர்களின் சார்பில் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளனர். இந்த பதிவை விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளரான பூஸ்ஸி ஆனந்து தெரிவித்திருக்கிறார்.

விஜய் மக்கள் இயக்கத்திற்கு சமீபத்தில் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பகுதிகள் தொடங்கப்பட்டன. இந்த நிலையில் முதல் முறையாக விநாயகர் சதுர்த்திக்கு அவர்கள் விஜயின் சார்பாக வாழ்த்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மக்கள் இயக்கம் வெளியிடும் அனைத்து பதிவுகளிலும் தளபதி விஜய்யின் அறிவுறுத்தல் படி என்ற வாசகம் சேர்க்கப்படுகிறது. அதேபோல் இந்த பதிவிலும் நடிகர் விஜய்யின் சார்பில் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயிலர் விநாயகர் சிலையை வடிவமைத்த ரஜினி ரசிகர்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதன் காரணமாக நடிகர் விஜய் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார் என அவரின் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

 
Published by:Shalini C
First published:

Tags: Thalapathy vijay

அடுத்த செய்தி