முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Vinayagar Chaturthi: ஜெயிலர் விநாயகர் சிலையை வடிவமைத்த ரஜினி ரசிகர்!

Vinayagar Chaturthi: ஜெயிலர் விநாயகர் சிலையை வடிவமைத்த ரஜினி ரசிகர்!

ரஜினிகாந்த் - விநாயகர்

ரஜினிகாந்த் - விநாயகர்

4 கிலோ எடை கொண்ட களிமண்ணில் ஒன்றரை அடி உயரத்தில் ஜெயிலர் விநாயகர் சிலையை வடிவமைத்துள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ரஜினி ரசிகர் வடிவமைத்த ஜெயிலர் விநாயகர் சிலை அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த பூளவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித், வயது 27. மண்பாண்டங்கள் தயார் செய்து விற்பனை செய்து வருகிறார். தீவிர ரஜினி ரசிகரான இவர், ரஜினியைப் போல விநாயகர் சிலை வடித்து ரஜினியிடம் கொடுத்து வாழ்த்து பெற்றுள்ளார்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை வடிவமைக்க திட்டமிட்டார் ரஞ்சித். அதில் நடிகர் ரஜினியை பிரதிபலிப்பாக கொண்டு வர வேண்டும் என எண்ணிய அவர், ஜெயிலர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இருப்பதைப் போல விநாயகர் சிலையை வடிவமைத்து அதற்கு ஜெயிலர் விநாயகர் என பெயர் வைத்து உள்ளார்.

பிரார்த்தனைகளுக்கு சக்தி உண்டு... மருத்துவமனையில் பாரதிராஜாவை சந்தித்த ராதிகா சரத்குமார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

4 கிலோ எடை கொண்ட களிமண்ணில் ஒன்றரை அடி உயரத்தில் ஜெயிலர் விநாயகர் சிலையை வடிவமைத்துள்ளார். மேலும் எலி கையில் லத்தியை கையில் கொண்டு வந்து தருவது போலவும் வடிவமைத்துள்ளார். இந்த சிலையை வடிவமைக்க ஒருமணி நேரம் ஆனதாகவும் ரஞ்சித் தெரிவித்தார். மேலும் ரஜினியின் தாய் - தந்தை சிலையையும் செய்து வைத்துள்ளதாகவும், அவற்றை நடிகர் ரஜினிகாந்திடம் கொடுக்க வேண்டும் எனவும் தனது ஆசையை தெரிவித்தார்.

First published:

Tags: Rajinikanth, Tamil Cinema