குட்டி ஸ்டோரி பாடலுக்கு லண்டனில் நடனமாடி அசத்தும் பிகில் பிரபலம்
பிகில் படத்தில் நடித்த வினயா சேஷன் குட்டி ஸ்டோரி பாடலுக்கு நடனமாடி அசத்தியுள்ளார்.

மாஸ்டர்
- News18 Tamil
- Last Updated: August 4, 2020, 4:35 PM IST
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் மாஸ்டர். தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரவேண்டிய இந்தப் படம் கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் திறக்கப்படாததால் இன்னும் ரிலீசாகவில்லை.
அனிருத் இசையில் வெளியான படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குட்டி ஸ்டோரி பாடல் மட்டும் இதுவரை யூடியூபில் 67 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ள நிலையில், பிகில் படத்தில் விஜய்யின் கால்பந்து அணியில் நடித்த வினயா சேஷன் இங்கிலாந்தில் நடைபெற்ற நடனப் போட்டி ஒன்றில் குட்டி ஸ்டோரி பாடலுக்கு நடனமாடி அசத்தியுள்ளார்.
தான் நடனமாடிய வீடியோவில் சிறுபகுதியை ட்விட்டரில் பகிர்ந்திருக்கும் வினயா சேஷன், “உங்களுக்கு இது பிடிக்கும் என நினைக்கிறேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வினயாவின் வீடியோவைப் பார்த்த பலரும் அவரது நடனத்தை வெகுவாக பாராட்டியிருப்பதோடு வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

🌪️ When you groove to a Thalapathy @actorvijay song, you feel some verelevel swagger 🌪️
Here's a glimplse of #Kuttistory from #showdown_uk ;) had a great deal of fun performing after ages ☺️ Hope you all like it ❤️ pic.twitter.com/l0pZ9B59V4— Vinaya Seshan (@VinayaSeshanOff) August 3, 2020