தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்த வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜ் இன்று பிறந்த நாள் கொண்டாடிவரும் நிலையில் அவரைப் பற்றிய சிறப்பு பதிவு.
தமிழ் சினிமா எத்தனையோ வில்லன் நடிகர்களை சந்தித்துள்ளது. அவர்களில் வித்தியாசமான வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜ். மாநில எல்லைகளைக் கடந்து, மொழி எல்லைகளுக்கு அப்பாற்பட்டு சினிமா உலகில் அனைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாடும் கலைஞன் பிரகாஷ்ராஜ். பாலசந்தரால் 'டூயட்' திரைப்படத்தில் தமிழ் சினிமாவில் கால் பதித்த பிரகாஷ்ராஜுக்கு முதல் திருப்பு முனையாக அமைந்தது அஜீத்தின் ஆசை.
ஆசை திரைப்படத்தில் பிரகாஷ்ராஜின் சைக்கோத்தனம் கலந்த நடிப்பு அவரது கால்ஷீட்டை நிரப்ப வைத்தது. திருநங்கையாக 'அப்பு', ரஜினியுடன் படையப்பா.. சந்திப்போமா உள்ளிட்ட பல திரைப்படங்களில் தனது திறமையை வெளிக்காட்டிய பிரகாஷ் ராஜுக்கு திருப்பு முனையாக அமைந்தது ’இருவர்’ திரைப்படம். அரசியல் களம் கொண்ட இந்தத் திரைப்படத்தில் அனல் தெறிக்கும் வசனங்களுக்கு தனது உடல் மொழியால் உயிர் கொடுத்தார் பிரகாஷ்ராஜ்.
ராஜா ராணி 2 வில் சந்தியா போன பிறகு சரவணனுக்கு இப்படியொரு நிலைமையா?
நேர்மறை கதாபாத்திரம், எதிர்மறை கதாபாத்திரம், கவுரவ தோற்றம் என கலந்து கட்டி அடித்த பிரகாஷ் ராஜுக்கு ரசிகர்களை அள்ளித் தந்தது விஜய் நடிப்பில் வந்த ‘கில்லி’. ஒரு தனித்துவம் மிக்க வில்லன் நடிகராக இவரை அடையாளப்படுத்தியது இத்திரைப்படத்தின் முத்துப்பாண்டி கதாபாத்திரம். ‘செல்லம் ஐ லவ் யூ’ என பிரகாஷ் ராஜ் சொல்லும் ஸ்டைல் இவரது ட்ரேட் மார்க்கானது.
தொடர்ந்து போக்கிரி, பேரரசு, வீராப்பு.. பீமா…சிவகாசி.. என ஸ்டார் கதாநாயகர்களின் வில்லனாக மிரட்டினார் பிரகாஷ் ராஜ். இப்படி 'போக்கிரி', தொடங்கி 'சிங்கம்' வரை கொடூர வில்லன் கதாபாத்திரங்களின் மூலம் ரசிகர்களை பிரகாஷ்ராஜ் வசீகரித்த படங்களின் பட்டியல் நீளமானது.
ஒரு திரைப்படத்தில் ஹீரோ, அடுத்த திரைப்படத்தில் கம்பீரமான போலீஸ் ஆபீசர், வேறொரு திரைப்படத்தில் வில்லன், இன்னொரு திரைப்படத்தில் காமெடி கலந்த கதாபாத்திரம் என ஆல்ரவுண்டராக அதகளம் பண்ணுவது பிரகாஷ் ராஜின் ஸ்டைல் ஆனது. அவற்றில் குறிப்பிடத்தக்க வகையில், கமல்ஹாசனுடன் 'வசூல்ராஜா எம்பிபிஎஸ்' ரஜினிகாந்துடன் ‘அண்ணாத்தே’ என வழக்கம் போல் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.
BB ultimate : யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற விஜய் டிவி பிரபலம்!
பிரியதர்ஷன் இயக்கிய 'காஞ்சிவரம்' திரைப்படத்திற்காக தேசிய விருதைப் பெற்றார். 'சந்தோஷ் சுப்பிரமணியம்' திரைப்படத்தில் அவர் ஏற்ற கண்டிப்பு மிக்க தந்தை கதாபாத்திரமும்… அபியும் நானும் திரைப்படத்தின் அப்பா கதாபாத்திரமும் இவரை மகா கலைஞன் என சொல்ல வைத்தது.
ஒரு நடிகராக மட்டுமல்லாமல் அழகிய தீயே, மொழி, அபியும் நானும், பயணம் ஆகிய திரைப்படங்களை தயாரித்தும், தோனி, உன் சமையல் அறையில் போன்ற திரைப்படங்களை இயக்கியும் தனது சினிமா காதலை வெளிப்படுத்தும் பிரகாஷ் ராஜை தமிழ் சினிமா என்றும் காதலிக்கும் என்பதை மறுப்பதற்கில்லை.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Prakashraj, Kollywood, Tamil Cinema