• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Valimai : இந்தியாவின் மிகப்பெரும் ஆக்சன் படமாக 'வலிமை' அமையும்: வில்லன் கார்த்திகேயா

Valimai : இந்தியாவின் மிகப்பெரும் ஆக்சன் படமாக 'வலிமை' அமையும்: வில்லன் கார்த்திகேயா

வலிமை திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில் அஜித், எச்.வினோத் மற்றும் வலிமை படம் குறித்த முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார் படத்தின் வில்லன் கார்த்திகேயா.

  • Share this:
    இந்தியாவின் மிகப்பெரும் ஆக்சன் படமாக வலிமை அமையும் என்று, படத்தின் வில்லன் கார்த்திகேயா கூறியுள்ளார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. அஜித், எச்.வினோத் குறித்தும், வலிமை படம் தொடர்பாகவும் சுவாரசியமான தகவல்களை அளித்துள்ளார் கார்த்திகேயா.

    அஜித் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் பொங்கலன்று திரைக்கு வருகிறது. படத்திலிருந்து ஒரு சிங்கிள் ட்ராக் மற்றும் டீசர் க்ளிம்ப்ஸ் ஆகியவை வெளியிடப்பட்டுள்ளன. டீசரில் வரும் அஜித் தொடர்பான காட்சிகள் ரசிகர்களின் பேராதரவை பெற்றதுடன், படத்தின் மீது மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில் வலிமை படம், இந்தியாவின் மிகப்பெரும் ஆக்சன் படமாக அமையும் என்று படத்தின் வில்லன் கார்த்திகேயா கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது-

    நான் ராஜா விக்ரமர்கா ஷூட்டிங்கில் இருந்தேன். அப்போதுதான் எனக்கு வலிமை படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அஜித் சார் - எச். வினோத் காம்போவில் இப்படியொரு வாய்ப்பு எனக்கு வந்ததை பெரும் ஆச்சரியமாக உணர்ந்தேன். படத்தின் ஸ்க்ரிப்டை மிகச் சிறப்பாக இயக்குனர் எச். வினோத் எழுதியிருந்தார்.

    ஸ்க்ரிப்டை முழுவதுமாக படித்தேன். அப்போது, என் வில்லன் கேரக்டருக்கு படத்தில் எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறது என்பதை உணர்ந்தேன். படத்தில் அஜித் சார் போலீஸ். நான் கிரிமினல். வலிமையில் ஹீரோவும் வில்லனும் உடலாலும், மனதாலும் வலிமையாக இருப்போம். படத்தில் என் பெயரும் வழக்கமான படங்களில் வருவதைப் போன்று இருக்காது. வித்தியாசமாக இருக்கும்.

    அஜித் சார் ஒரு மிகப்பெரும் நட்சத்திரம். ஷூட்டிங் தொடங்கியபோது எனக்கு புதுவிதமாக இருந்தது. அஜித் சார் என்னை நல்லபடியாக பார்த்துக் கொண்டார். அவர் ஷூட்டிங்கின்போது எல்லோரையும் சமமாக நடத்துவார். எல்லோருக்கும் உதவியமாக இருப்பார். இப்படியொரு பெரிய நட்சத்திரம் இனிமையாக பழகினால், படக்குழுவில் இருக்கும் எல்லோரும் சிறப்பாக செயல்படுவார்கள்.

    எனக்கு துப்பாக்கியை எப்படி பிடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்ததே அஜித் சார்தான். புல்லட்டுகளை எப்படி மாற்றுவதையும் அவர் எனக்கு கற்றுத் தந்தார். இது படப்பிடிப்பு முழுவதும் எனக்கு உதவியாக இருந்தது. இந்தியாவின் மிகப்பெரும் ஆக்சன் படமாக வலிமை உருவாக்கப்பட்டுள்ளது. எமோஷனல் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. எச். வினோத் அவ்வளவு சிறப்பாக படத்தை கொடுத்துள்ளார். நிச்சயமாக வலிமை இந்திய சினிமாவில் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்.
    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Abdul Mushtak
    First published: