விக்ரம் படத்தில் இடம்பெற்றதற்காக படக்குழுவினருக்கு வில்லேஜ் குக்கிங் சேனல் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழ் யூ டியூப் சேனல்களிலேயே மிக அதிகமான சப்ஸ்கிரைபர்களை கொண்ட சேனலாக வில்லேஜ் குக்கிங் சேனல் இருந்து வருகிறது. தற்போது இதற்கு 16.7 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் யூடியூபில் இருக்கின்றனர்.
இந்த சேனலில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களின் ஒருவரான ராகுல் காந்தியே நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். அவருக்கு சமையல் குழுவினர் காளான் பிரியாணியை சமைத்துக் கொடுத்தனர்.
இதையும் படிங்க - நயன்தாரா திருமண விழாவிற்கான Promo ஷூட்டை நடத்திய இயக்குனர் கவுதம் மேனன்…
இந்நிலையில் கமல் நடித்துள்ள விக்ரம் படத்தில் வில்லேஜ் குக்கிங் சேனல் சமையல் குழுவினருக்கு நடிப்பதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
விக்ரம் படத்திலும் சமையல் செய்யும் காட்சியில் வில்லேஜ் குக்கிங் சேனல் சமையல் குழுவினர் இடம்பெற்றனர். இந்த காட்சிக்கு திரையரங்கில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதையும் படிங்க - ரஜினியை கவர்ந்த ‘விக்ரம்’ திரைப்படம்… போனில் தொடர்புகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து
இந்த நிலையில் தங்களுக்கு வாய்ப்பு அளித்தமைக்காக நன்றி தெரிவித்து, லோகேஷ் கனகராஜ், கமல், ராஜ்கமல் பிலிம் இன்டர் நேஷனல் உள்ளிட்ட விக்ரம் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்து வில்லேஜ் குக்கிங் சேனல் குழுவினர் வீடியோ வெளியிட்டுள்ளனர்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இதற்கிடையே நேற்று முன்தினம் வெளியான விக்ரம் திரைப்படம் முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூலை பெற்றுள்ளது. நேற்றைய கணக்குப்படி மொத்தமாக இந்தப் படம் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருக்கும் என்று சினிமா நிபுணர்கள் கணித்துள்ளார்கள்.
எதிர்பார்த்ததை விட பன் மடங்கு படம் சிறப்பாக அமைந்துள்ளதால் இன்னும் சில வாரங்களுக்கு விக்ரம் திரையரங்குகளில் ஓடும் என்பதை உறுதியாக சொல்லலாம்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.