• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Village Cooking Channel: 1 கோடி சப்ஸ்கிரைபர்கள், 10 லட்சம் கொரோனா நிவாரண நிதி - கலக்கும் வில்லேஜ் குக்கிங் சேனல்!

Village Cooking Channel: 1 கோடி சப்ஸ்கிரைபர்கள், 10 லட்சம் கொரோனா நிவாரண நிதி - கலக்கும் வில்லேஜ் குக்கிங் சேனல்!

முதலமைச்சருடன் வில்லேஜ் குக்கிங் சேனல் குழுவினர்

முதலமைச்சருடன் வில்லேஜ் குக்கிங் சேனல் குழுவினர்

ஒரு கோடி சப்ஸ்கிரைப்களைக் கொண்ட யூடியூப் சேனல் என்ற பெருமையையும் இந்த சேனல் பெற்றுள்ளது.

  • Share this:
    முதலமைச்சரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு 10 லட்சம் நன்கொடை, 1 கோடிக்கும் மேலான சப்ஸ்கிரைபர்களுடன், தென்னிந்தியாவில் முதல் டைமண்ட் பட்டன் என கலக்குகிறது வில்லேஜ் குக்கிங் சேனல் எனும் யூ-ட்யூப் சேனல்.

    கையில் ஃபோன் வைத்திருக்கும் யார் வேண்டுமானாலும் யூ-ட்யூபில் சேனல் ஆரம்பிக்கலாம். ஆனால் அதில் வெற்றி பெறுவதற்கு, புதுமையும், கடின உழைப்பும் கட்டாயம் தேவை. குறிப்பாக கடந்த லாக்டவுனில் இருந்து நிறைய யூ-ட்யூப் சேனல்கள் தொடங்கப்பட்டன. பிரபலங்கள், சாதாரண நபர்கள் என பெரும்பாலானோரின் கவனம் யூ-ட்யூப் பக்கம் திரும்பியது.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    சமையல், அழகுக்குறிப்பு, ஃபிட்னெஸ் போன்றவற்றில் தான் அதிக யூ-ட்யூபர்களின் கவனம் இருக்கிறது. குறிப்பாக சமையலில் சொல்லவே வேண்டாம், அவ்வளவு சேனல்கள். அதில் முக்கியமான ஒன்றாக வில்லேஜ் குக்கிங் சேனலை சொல்லலாம். இன்னும் எளிதாக சொல்ல வேண்டுமெனில், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல்காந்தி, 'வில்லேஜ் குக்கிங் சேனல்' குழுவினரோடு கலந்துகொண்டு அவர்கள் சமைத்த காளான் பிரியாணியை சாப்பிட்டு பாராட்டினார்.



    புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த இவர்கள், யூடியூபில் பிரபலமான 'வில்லேஜ் குக்கிங் சேனலை' நடத்தி வருகிறார்கள். ஒரு கோடி சப்ஸ்கிரைப்களைக் கொண்ட யூடியூப் சேனல் என்ற பெருமையையும் இந்த சேனல் பெற்றுள்ளது. அதோடு தென்னிந்தியாவிலேயே முதல் டைமண்ட் பட்டன் பெற்ற சேனல் என்ற மகிழ்ச்சியையும் பகிர்ந்துக் கொண்டனர்.

    இந்நிலையில் தமிழக முதலமைச்சரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு வில்லேஜ் குக்கிங் சேனல் சார்பில் ரூ 10 லட்சம் நன்கொடையளித்துள்ளனர். இதனை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: