ரூ.300 கோடி பட்ஜெட்டில் விக்ரம் நடிக்கும் மஹாவீர் கர்ணா... வசனம் எழுதிய `சர்கார்’ எழுத்தாளர்

ரூ.300 கோடி தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாக இருக்கும் படத்தில் நடிகர் விக்ரம் நடிக்கிறார்.

news18
Updated: December 5, 2018, 6:04 PM IST
ரூ.300 கோடி பட்ஜெட்டில் விக்ரம் நடிக்கும் மஹாவீர் கர்ணா... வசனம் எழுதிய `சர்கார்’ எழுத்தாளர்
விக்ரம்
news18
Updated: December 5, 2018, 6:04 PM IST
ரூ.300 கோடி தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாக இருக்கும் படத்தில் நடிகர் விக்ரம் நடிக்கிறார்.

நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் கடாரம் கொண்டான் எனும் படத்தில் நடிகர் விக்ரம் தற்போது நடித்து வருகிறார். இந்தப் படத்தை தூங்காவனம் படத்தின் இயக்குநர் ராஜேஷ் செல்வா இயக்குகிறார். சமீபத்தில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டிருந்தார்.

இந்தப் படத்தை அடுத்து என்னு நிண்டே மொய்தீன் பட இயக்குநர் ஆர்.எஸ்.விமல் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிக்கிறார். யுனைடெட் ஃபிலிம் கிங்டம் நிறுவனம் இந்தப் படத்தை ரூ.300 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கிறது. படத்துக்கான பூஜை திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோயிலில் நடைபெற்றது. இந்தப் பூஜையில் இயக்குநர் விமல், நடிகர் சுரேஷ் கோபி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.இதுகுறித்து தனது இணையதள பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் வசனகர்த்தா ஜெயமோகன், “மகாவீர் கர்ணா என்று இப்போதைக்குப் பெயரிடப்பட்டிருக்கும் தமிழ் –தெலுங்கு –இந்தி படத்தின் முதல் நிகழ்ச்சி. விக்ரம் கதாநாயகனாக நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்போதைக்கு பெரிய நடிகர்களில் ஒருவர் பீமனாக நடிக்கும் - ஹாலிவுட் நடிகர்.

படத்திற்காக ஏறத்தாழ முப்பதடி உயரத்தில் ஒரு தேர் செட் அமைக்கப்படுகிறது. அதிலுள்ள நூறு மணிகளில் ஒரு மணியை திருவனந்தபுரம் பத்மநாபசாமி ஆலயத்தில் பூசை செய்து தச்சர்களிடம் கொடுக்கும் நிகழ்ச்சி.

Loading...
2-ம் தேதி மாலை விமானத்தில் திருவனந்தபுரம் வந்தேன். மறுநாள் , 3-ம் தேதி காலை விழா. சுரேஷ்கோபி, மலையாள திரை எழுத்தாளர் சங்கத்தலைவர் பி.உன்னிக்கிருஷ்ணன் ஆகியோர் பங்கெடுத்தனர். நிகழ்ச்சி மதியம் முடிந்தபின் நாகர்கோயில் வந்தேன்.

கர்ணன், நான் திரைக்கதை உதவியும் வசனமும் எழுதும் படம். புராணப்பின்னணியில் எடுக்கப்படுவது. எந்நு நின்றே மொய்தீன் என்னும் பெரும் வெற்றிப் படத்தை இயக்கிய ஆர்.எஸ்.விமல் இயக்குகிறார். லண்டனைச் சேர்ந்த யுனைடெட் ஃபிலிம் கிங்டம் தயாரிக்கிறது. ஷாருக் கானின் ரெட் சில்லீஸ் நிறுவனமும் கூட்டாக சேர பேச்சு நடக்கிறது.இப்போதைய பட்ஜெட் 250 கோடி ரூபாய். செட்டுக்கு மட்டுமே 80 கோடி. 80 கோடிவரை வரைகலைக்காக. ஹைதராபாத் ராமோஜிராவ் நிறுவனத்தில் அப்பணிகள் நடைபெறுகின்றன.

கர்ணனின் திரைக்கதை 2016-ல் திட்டமிடப்பட்டு 2017-ல் எழுதி முடிக்கப்பட்டுவிட்டது. படத்தில் என் பணி இனி அனேகமாக ஏதுமில்லை. அதன் மாபெரும் பட்ஜெட் மற்றும் நடிகர்குழு காரணமாக தாமதமாகியது. மார்ச் மாதம் படப்பிடிப்பு தொடங்கக்கூடும். இன்னொரு பெரிய படம்” என்று கூறியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து கவுதம் காம்பீர் ஓய்வு - வீடியோ

First published: December 5, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...