முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / திரைக்கு வருகிறது விக்ரம் நடித்த ’துருவ நட்சத்திரம்’.. வெளிவந்தது புதிய அப்டேட்..!

திரைக்கு வருகிறது விக்ரம் நடித்த ’துருவ நட்சத்திரம்’.. வெளிவந்தது புதிய அப்டேட்..!

துருவ நட்சத்திரம்

துருவ நட்சத்திரம்

விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட துருவ நட்சத்திரம் படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக சினிமா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். இவர் நடிப்பில் கடந்தாண்டு வெளியான 'பொன்னியின் செல்வன்' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பல பிரபலங்கள் நடித்து வெளியான இந்தப் படத்தில் ஆதித்ய கரிகாலனாக விக்ரம் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார் விக்ரம்.

விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் 'துருவ நட்சத்திரம்'. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்திருக்கிறார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

துருவ நட்சத்திரம் படத்தின் வேலைகள் 2017-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டது. வெளிநாடுகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. படத்தை 2018-ல் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது. அதன்பின்னர் விக்ரம், கெளதம் இருவருமே தங்களது அடுத்தடுத்த படங்களில் பிசியானார்கள்.

இந்நிலையில் கடந்த வருட இறுதியில் இந்தப் படத்தின் வேலைகள் மீண்டும் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது.

இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. மேலும், அந்த போஸ்டரில் 'விரைவில் ஜான் உங்களை சந்திப்பார்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Vikram