கடாரம் கொண்டான்... அடுத்த அப்டேட்

க்டாரம் கொண்டான் படத்திற்கு சென்சாரில் 'யூ/ஏ' சான்றிதழ் கிடைத்துள்ளது.

news18
Updated: July 14, 2019, 4:22 PM IST
கடாரம் கொண்டான்... அடுத்த அப்டேட்
கடாரம் கொண்டான்
news18
Updated: July 14, 2019, 4:22 PM IST
கடாரம் கொண்டான் படத்தின் ரன்னிங் டைம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தூங்காவனம் படத்தின் இயக்குநர் ராஜேஷ் செல்வா இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள படம் கடாரம் கொண்டான். இந்தப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் கமல்ஹாசனின் மகள் அக்‌ஷராஹாசன் நடித்துள்ளார். மேலும் நாசர் மகன் அபி மெஹ்தி ஹாசன், பிக்பாஸ் புகழ் மீராமிதுன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்

கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் வரும் 19-ம் தேதி வெளியாகிறது.

க்டாரம் கொண்டான் படத்தின் ட்ரெய்லர் சில தினங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் படத்திற்கு சென்சாரில் 'யூ/ஏ' சான்றிதழ் கிடைத்துள்ளது.

தற்போது படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் நேரம் 121 நிமிடங்கள் அதாவது கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் என்று தெரியவந்துள்ளது.

கடாரம் கொண்டான்


Also watch
Loading...
First published: July 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...